வரையன - மலையிடத்தன | 11-16 |
வரையா கர்ச்சி - களவுப் புணர்ச்சி | 8-41 |
வரைவரை - சிகரந்தோறும் | 7-4 |
வலந்தது - கட்டப்பட்டது | 4-43 |
வலத்தினது - ஆணையின் கண்ணது | 5-21 |
வலந்து - பிறழ | 3-11 |
வலந்துழி - பிணித்தபொழுது | 4-13 |
வலம்புரி - சங்கு | 3-77 |
வலவ - வலப்பக்கத்துள்ளவனே | 3-89 |
வலவயின் - வலப்பக்கத்தில் | 1-11 |
வலன் - வெற்றி | 7-6 |
வல்லா - மாட்டாத | 1-34 |
வல்லார் - சூதுப்போர் ஆடுவார் | 9-74 |
வல்லுப்போர் - சூதாட்டம் | 18-41 |
வவ்வு - வவ்வுதற்றொழில் | 6-80 |
வழிமுறை - பின்னர் | 2-15 |
வழியது - பின்னதாகிய தேய்பிறைப் பக்கம் | 11-35 |
வழுதி - பாண்டியன் | 10-126 |
வழை - ஒரு மரம் | 12-5 |
வழைமது - இளங்கள் | 11-66 |
வளப்பாடு - பெருக்கம் | 2-44 |
வளர்வு - வளர்தல் | 15-27 |
வளாய் - விரவி | 11-105 |
வளி - காற்று | 3-4 |
வளிபொரு - காற்று மோதா நின்ற | 8-90 |
வளிவாங்கு - காற்றாலே வளைக்கப்பட்ட | 7-14 |
வளையினவை - சங்கினையுடையை | 1-57 |
வள் - பெரிய | 13-50 |
வள்பு - வார் | 21-6 |
வள்ளம் - கிண்ணம் | 10-75 |
வள்ளி - வள்ளிப்பூ | 21-10 |
வள்ளிப்பூ - வள்ளியாகிய தாமரை | 14-22 |
வறள - வற்ற | 3-25 |
வறுங்கை - படைக்கலனில்லாத கை | 5-56 |
வனப்பு - அழகு | 3-50 |
வனப்பு - பண்பு | 7-50 |
வா | |
வாகுவலயம் - தோள்வளை | 7-47 |
வாகை - ஒருமரம் | 14-7 |
வாக்குநர் - வார்ப்பவர் | 10-75 |
வாங்கு - வளைந்த | 2-28 |
வாங்குவார் - இழுப்பார் | 9-53 |
வாடற்க - குறையாதொழிக | 6-106 |
வாணுதல் - ஒளியுடைய நெற்றி | 8-75 |
வாயடை - உணவு | 2-69 |
வாயாளோ - நேர்ந்திலளோ | 6-66 |
வாயில்சூள் - பொய்யாணை | 8-84 |
வாயுமல்ல - வாய்மையுடையனவுமல்ல | 5-16 |
வாய் - இடம் | 8-25 |
வாய்க்கென - எய்துக என்று | 8-107 |
வாய்த்தன்று - வாய்த்தது | 16-31 |
வாய்த்தன்று - வாய்புடைத்தாயிற்று | 11-87 |
வாய்மையன் - வாய்மையைப் பேணுபவன் | 5-33 |
வாய்மொழி - வேதம் |
1-65; 3-11 |
வாய்மொழி மகன் - பிரமன் | 3-93 |
வாய்வாய் - இடந்தோறும் | 17-31 |
வாய்வாளா - மௌனமாக | 20-46 |
வாரணச் சேவல் - கோழிச்சேவல் | 5-64 |
வாரணம் - கோழிச்சேவல் | 5-58 |
வார் - நீண்ட | 14-14 |
வார் - வருவாய் | 20-70 |
வாலருவி - வெள்ளிய அருவி | 6-52 |
வாலியோன் - பலதேவன் | 2-20 |
வால் - வெள்ளிய | 2-33 |
வால் வளை - வெண்சங்கு | 1-3 |
வாளி - அட்பு | 9-54 |
வாளிகள் - வாட்படை வீரர் | 9-54 |
வாளை - ஒருமீன் | 7-34 |
வாள்வீரம் - ஒரு மரம் | 11-19 |
வான்மலர் - தூயமலர் | 12-9 |
வானம் - மேகம் | 6-2 |
வானவன் - இந்திரன் | 9-58 |
வானவன்மகள் - தேவசேனை | 9-58 |
வானியாறு - ஆகாயகங்கை (ப-தி) | 2-95 |
வான் - மேகம் |
2-56; 7-30 |
வான்கிளி - சிறந்த கிளி | 9-42 |