அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | |
மல் - பெரிய | |
மால்பு இடர் அறியா - கண் ஏணியாலே இடர்ப்பட்டறியாத | |
மான்ற - மயங்கிய | |
மான்றல் - மயங்குதல் | |
மிசைதல் - தின்னுதல் | |
மிச்சில் - எச்சம், எஞ்சியது | |
மிளிர்க்கும் - புரட்டாநிற்கும் | |
மிளிர்க்குதல் - புரட்டுதல் | |
மிளிர்தல் - புரளுதல் | |
மிளிர்வை -ஆணத்திலிடப்படுவது (தான்) | |
மிளை - காவலரண், காவற்காடு | |
முகை - துறுகல் | |
முசுப்பெருங்கலை - ஆண்குரங்கு | |
முடம்முதிர் - முடம்பட்ட | |
முணக்கல் - அடக்குதல் | |
முணாது - வெறுப்பெய்தாது | |
முண்டகம் - கடல்முள்ளி | |
முதுக்குறைவு - பேரறிவு | |
முதுவாய் - அறிவுவாய்ந்த | |
முதையல் - பழங்கொல்லை | |
முயங்கி - அணைந்து, சேர்ந்து | |
முயத்தல் - நெருங்கல் | |
முயற்சி - கயிறு | |
முரணுதல் - மாறுகொண்டழித்தல் | |
முரம்பு - வன்னிலம், மேட்டு நிலமுமாம் | |
முரம்பு தலைமணந்த - பரல் நிரம்ப மேலே பொருந்திய | |
முரலும் - ஒலிக்கும் | |
முரவாய் - ஒடிந்த வாய் | |
முரவு - ஒடிதல் | |
முரி - முரிவு, ஒடிவு | |
முலைக்கரைவலம் - கொங்கை முகட்டினிடம் | |
முழவுக்கண் புலரா - குடமுழாவின்கண் ஓயாது முழங்குகின்ற | |
முழுவலி - நிரம்பிய வலி | |
முளரி - கள்ளி | |
முளவுமான் - முட்பன்றி | |
முளிஇலை - காய்ந்த சருகு | |