அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | |
முளிகொடி - காய்ந்த கொடி | |
முள்கல் - தங்குதல் | |
முறி - தளிர் | |
முற்றுக்குலை - முற்றிய குலை | |
முற்றை - முன்பு | |
முனாது - முன்பு | |
முனி - யானைக்கன்று | |
முனியல் - வெறாதே கொள் | |
முனைஇ - வெறுத்து | |
முனைதல் - வெறுத்தல் | |
முன்கடை - முன்றில் | |
முன்பு - வலிமை | |
முன்னியவ்வே - கருதியுள்ளவை | |
மூக்கிறுபு - மூக்கு ஊழ்த்து விழுந்து | |
மூரி - பெருமை | |
மேக்குயர் - மேலோங்கிய | |
மேவல் - விரும்புதல் | |
மேவுஅலைப்பட்ட - விருப்பம் அலைத்தலால் துன்பப்பட்ட | |
மொசிதல் - நெருங்கல் | |
மோசை - விரலணி | |
மை அணல் - மைபோன்றகரிய அணல் | |
மைஈர் - கரிய, ஈரிய | |
மையூன் - ஆட்டிறைச்சி | |
யாங்கு - என்ன வண்ணம் | |
யாணர் - அழகிய | |
யாணர் - புதுவருவாய் | |
யாதுமில்சொல் - பயனற்ற சொல் | |
யாப்பு - ஒன்றோடொன்று பின்னியிருக்கட்டும் | |
யாழ் - முன்னிலையசை | |
வங்கம் - கப்பல் | |
வங்கம் - வெள்ளி | |
வசிபு - பிளந்து | |
வடந்தை - வடக்கினின்றும் வருங்காற்று | |
வடி - கூர்மை | |
வடித்தல் - வாரிமுடித்தல் | |
வடுக்கொள - தழும்புகொள்ளுமாறு | |