அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | |
வள்ளுயிர் - பேரொலி | |
வறம் - கோடை | |
வறனுற்றென - வறுமையுற்றதாக | |
வறிது - சிறிது | |
வறுநீர் - நீர்வற்றிய குளம் | |
வறுந்தலை - அலங்கரிக்கப்படாத தலை | |
வனம் - அழகு | |
வன்பால் - பாலை | |
வாஅர்ந்து - நேர்மையுற்று | |
வாங்கிய கதிர் - நீண்டுபறிந்த கதிர் | |
வாங்கு - வளைந்த | |
வாங்குசினை - வளைந்த கிளை | |
வாடல் - வாடுதலையுடையன | |
வாப்பறை - தாவிப் பறத்தல் | |
வாய் - உண்மை | |
வாரல் - நீளுதல் | |
வார்கோல் - நெடிய கோற்றொழிலமைந்த | |
வார்தல் - நெடுகுதல் | |
வாலாவேழம் - வெண்மையில்லா யானை | |
வாலியோன் - வெண்ணிற முடையவன் | |
வாவல் - வௌவால் | |
வாழியர் - இகழ்ச்சிக்குறிப்பு | |
வானிற விசும்பு - மேகம்போன்ற காரிய நிறமுடைய விசும்புமாம் | |
வான் - வெண்மை | |
விசும்பு பயந்தாங்கு - ஆகாயம் பெற்றதுபோல | |
விசும்புறழ் - விசும்பிலே நீண்டுயர்ந்த | |
விடர் - பிளப்புக்களையுடைய | |
விடர் - மலைப்பிளப்பு | |
விடர்முகை - மலைப்பிளப்பு | |
விடுகோ - விடுவேனோ | |
விதிர்த்தல் - உதிர்த்தல் | |
விதுப்பு - நடுக்கம் | |
விதுப்பு - வருத்தம் | |
வியம் - வழி | |
வியர் - வியர்வை நீர் | |
வியல் அறை - அகன்ற பாறை | |