|
|
அருவி அன்ன பரு உறை சிதறி |
|
யாறு நிறை பகரும் நாடனைத் தேறி, |
|
உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று-அது |
|
தவப் பல் நாள் தோள் மயங்கி, |
|
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே, |
உரை |
|
தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.- அழிசி நச்சாத்தனார் |
|
தீண்டலும் இயைவதுகொல்லோ-மாண்ட |
|
வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த |
|
நனந் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த |
|
புன்கண் மட மான் நேர்பட, தன்னையர் |
|
சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் |
|
குருதியொடு பறித்த செங் கோல் வாளி |
|
மாறு கொண்டன்ன உண்கண், |
|
நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே! |
உரை |
|
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஒரு சிறைப் பெரியன் |
|
அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப் |
|
பெருங் காடு உளரும் அசைவளி போல, |
|
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே! |
|
நொந்தனஆயின், கண்டது மொழிவல்; |
|
பெருந் தேன் கண்படு வரையில் முது மால்பு |
|
அறியாது ஏறிய மடவோன் போல, |
|
ஏமாந்தன்று, இவ் உலகம்; |
|
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே. |
உரை |
|
''பிரிவர்'' எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- சிறைக்குடி ஆந்தையார் |
|
புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து |
|
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர, |
|
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு, |
|
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் |
|
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் |
|
இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு |
|
மணி மிடை அல்குல் மடந்தை |
|
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே. |
உரை |
|
பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - உருத்திரன் |
|
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக் |
|
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!- |
|
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப் |
|
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ? |
|
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
|
வல் வில் இளையர் பக்கம் போற்ற, |
|
ஈர் மணற் காட்டாறு வரூஉம் |
|
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே. |
உரை |
|
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி |
|
பணைத் தோட் குறுமகள் |
|
பாவை தையும், |
|
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று-இவள் |
|
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய |
|
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார், |
|
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து |
|
யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்? |
|
பெரிதும் பேதை மன்ற- |
|
அளிதோதானே-இவ் அழுங்கல் ஊரே! |
உரை |
|
தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது. - கோழிக் கொற்றன் |
|
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை, |
|
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது |
|
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி, |
|
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் |
|
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே- |
|
''மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை, |
|
எக் கால் வருவது?'' என்றி; |
|
அக் கால் வருவர், எம் காதலோரே. |
உரை |
|
தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது. - ஓரிற் பிச்சையார் |
|
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து |
|
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச் |
|
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார் |
|
கொடியர் வாழி-தோழி!-கடுவன் |
|
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து, |
|
ஏர்ப்பனஏர்ப்பன உண்ணும் |
|
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே. |
உரை |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. - பேரிசாத்தன் |
|
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன் |
|
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி, |
|
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும் |
|
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ- |
|
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல் |
|
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும் |
|
இரும் பல் குன்றம் போகி, |
|
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே? |
உரை |
|
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் |
|
கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என் |
|
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப் |
|
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம் |
|
ஒரு நாள் புணரப் புணரின், |
|
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே. |
உரை |
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next