|
7
துயில் எழுப்பிய காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலாதெய்வம் உவவனம்புகுந்து
|
|
|
சுதமதியைத்
துயில் எழுப்பிய பாட்டு
]
|
|
|
|
|
|
மணிமே கலைதனை மணிபல் லவத்திடை
|
|
|
மணிமே கலாதெய்வம் வைத்து நீங்கி
|
|
|
மணிமே கலைதனை மலர்ப்பொழில் கண்ட
|
|
|
உதய குமரன் உறுதுயர் எய்திக்
|
|
5
|
கங்குல் கழியில்என் கையகத் தாள்எனப்
|
|
|
|
|
|
பொங்குமெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்
|
|
|
முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே
|
உரை |
|
கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை
திரியும்
|
|
|
கோள்நிலை திரிந்திடின் மாரிவறம்
கூரும்
|
|
10
|
மாரிவறங் கூரின் மன்உயிர் இல்லை
|
|
|
|
|
|
மன்உயிர் எல்லாம் மண்ஆள் வேந்தன்
|
|
|
தன்உயிர் என்னும் தகுதிஇன்று ஆகும்
|
|
|
தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
|
|
|
அவத்திறம் ஒழிகென்று அவன்வயின் உரைத்தபின்,
|
உரை |
15
|
உவவனம் புகுந்துஆங்கு உறுதுயில் கொள்ளும்
|
|
|
|
|
|
சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி
|
|
|
இந்திர கோடணை இந்நகர்க் காண
|
|
|
வந்தேன் அஞ்சல் மணிமே கலையான்
|
|
|
ஆதிசால் முனிவன் அறவழிப் படூஉம்
|
|
20
|
ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின்
|
|
|
|
|
|
விஞ்சையின் பெயர்த்துநின் விளங்குஇழை
தன்னைஓர்
|
|
|
வஞ்சம்இல் மணிபல் லவத்திடை வைத்தேன்
|
உரை |
|
பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்துஈங்கு
|
|
|
இன்றுஏழ் நாளில் இந்நகர் மருங்கே
|
|
25
|
வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள்
|
|
|
|
|
|
களிப்புமாண் செல்வக் காவல் பேர்ஊர்
|
|
|
ஒளித்துஉரு எய்தினும் உன்திறம் ஒளியாள்
|
|
|
ஆங்குஅவள் இந்நகர் புகுந்த அந்நாள்
|
|
|
ஈங்கு நிகழ்வன ஏதுப் பலஉள
|
உரை |
30
|
மாதவி தனக்குயான் வந்த வண்ணமும்
|
|
|
|
|
|
ஏதம்இல் நெறிமகள் எய்திய வண்ணமும்
|
|
|
உரையாய் நீஅவள் என்திறம் உணரும்
|
|
|
திரைஇரும் பௌவத்துத் தெய்வம்ஒன்று
உண்டுஎனக்
|
|
|
கோவலன் கூறிஇக் கொடியிடை தன்னைஎன்
|
|
35
|
நாமம் செய்த நல்நாள் நள்இருள்
|
|
|
|
|
|
காமன் கையறக் கடுநவை அறுக்கும்
|
|
|
மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே
|
|
|
நனவே போலக் கனவகத்து உரைத்தேன்
|
|
|
ஈங்குஇவ் வண்ணம் ஆங்குஅவட்கு உரைஎன்று
|
40
|
அந்தரத்து எழுந்துஆங்கு அருந்தெய்வம் போயபின்
|
உரை |
|
|
|
|
வெந்துயர் எய்திச் சுதமதி எழுந்துஆங்கு
|
உரை |
|
அகல்மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு
|
|
|
வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி
|
|
|
ஆடல் புணர்க்கு அரங்கியல் மகளிரில்
|
|
45
|
கூடிய குயிலுவக் கருவிகண் துயின்று
|
|
|
|
|
|
பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்த் தீந்தொடை
|
|
|
கொளைவல் ஆயமோடு இசைகூட் டுண்டு
|
|
|
வளைசேர் செங்கை மெல்விரல் உதைத்த
|
|
|
வெம்மைவெய் துறாது தன்மையில் திரியவும்
|
உரை |
50
|
பண்புஇல் காதலன் பரத்தமை நோனாது
|
|
|
|
|
|
உண்கண் சிவந்தாங்கு ஒல்குகொடி போன்று
|
|
|
தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்
|
|
|
விரைப்பூம் பள்ளி வீழ்துணை தழுவவும்,
|
உரை |
|
தளர்நடை ஆயமொடு தங்காது ஓடி
|
|
55
|
விளையாடு சிறுதேர் ஈர்த்துமெய் வருந்தி
|
|
|
|
|
|
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக்
|
|
|
குதலைச் செவ்வாய் குறுநடைப் புதல்வர்க்குக்
|
|
|
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
|
|
|
தூபம் காட்டித் தூங்குதுயில் வதியவும்,
|
உரை |
60
|
இறைஉறை புறவும் நிறைநீர்ப் புள்ளும்
|
|
|
|
|
|
காவுறை பறவையும் நாஉள் அழுந்தி
|
|
|
விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று
|
|
|
பழவிறல் மூதூர் பாயல்கொள் நடுநாள்,
|
உரை |
|
கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின்
|
|
65
|
யாமம் கொள்பவர் ஏத்துஒலி அரவமும்,
|
உரை |
|
|
|
|
உறையுள்நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து
|
|
|
நிறைஅழி யானை நெடுங்கூ விளியும்,
|
உரை |
|
தேர்வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்
|
|
|
ஊர்காப் பாளர் எறிதுடி ஓதையும்,
|
உரை |
70
|
முழங்குநீர் முன்துறைக் கலம்புணர் கம்மியர்
|
|
|
|
|
|
துழந்துஅடு கள்ளின் தோப்பிஉண்டு அயர்ந்து
|
|
|
பழஞ்செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும்,
|
உரை |
|
அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
|
|
|
விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
|
|
75
|
புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கம்
|
|
|
|
|
|
தீர்வினை மகளிர் குளன்ஆடு அரவமும்,
|
உரை |
|
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்
|
|
|
புலிக்கணத்து அன்னோர் பூத சதுக்கத்துக்
|
|
|
கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்கென
|
|
80
|
இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும்,
|
உரை |
|
|
|
|
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
|
|
|
கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர்
|
|
|
தம்துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
|
|
|
மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென
|
|
85
|
நின்றுஎறி பலியின் நெடுங்குரல் ஓதையும்,
|
உரை |
|
|
|
|
பல்வேறு ஓதையும் பரந்துஒருங்கு இசைப்பக்,
|
உரை |
|
கேட்டுஉளம் கலங்கி ஊட்டிருள் அழுவத்து
|
|
|
முருந்துஏர் இளநகை நீங்கிப் பூம்பொழில்
|
|
|
திருந்துஎயில் குடபால் சிறுபுழை போகி
|
|
90
|
மிக்கமா தெய்வம் வியந்துஎடுத்து உரைத்த
|
|
|
|
|
|
சக்கர வாளக் கோட்டத்து அங்கண்
|
|
|
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
|
|
|
உலக அறவியின் ஒருபுடை இருத்தலும்,
|
உரை |
|
கந்துஉடை நெடுநிலைக் காரணம் காட்டிய
|
|
95
|
அந்தில் எழுதிய அற்புதப் பாவை
|
|
|
|
|
|
மைத்தடங் கண்ணாள் மயங்கினள் வெருவத்
|
|
|
திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின்
|
உரை |
|
இரவி வன்மன் ஒருபெரு மகளே
|
|
|
துரகத் தானைத் துச்சயன் தேவி
|
|
100
|
தயங்குஇணர்க் கோதைத் தாரை சாவுற
|
|
|
|
|
|
மயங்கி யானைமுன் மன்உயிர் நீத்தோய்
|
|
|
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே
|
|
|
மாருத வேகனோடு இந்நகர் புகுந்து
|
|
|
தாரை தவ்வை தன்னொடு கூடிய
|
|
105
|
வீரை ஆகிய சுதமதி கேளாய்
|
உரை |
|
|
|
|
இன்றுஏழ் நாளில் இடையிருள் யாமத்துத்
|
|
|
தன்பிறப் பதனொடு நின்பிறப்பு உணர்ந்துஈங்கு
|
|
|
இலக்குமி யாகிய நினக்குஇளை யாள்வரும்
|
|
|
அஞ்சல்என்று உரைத்தது அவ்வுரை கேட்டு
|
|
110
|
நெஞ்சம் நடுக்குறூஉம் நேர்இழை நல்லாள்,
|
உரை |
|
|
|
|
காவ லாளர் கண்துயில் கொள்ளத்
|
|
|
தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப
|
|
|
வலம்புரிச் சங்கம் வறிதுஎழுந்து ஆர்ப்பப்
|
|
|
புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
|
|
115
|
புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப்
|
|
|
|
|
|
பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்பப்
|
|
|
பணைநிலைப் புரவி பலஎழுந்து ஆலப்
|
|
|
பணைநிலைப் புள்ளும் பலஎழுந்து ஆலப்
|
|
|
பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்பப்
|
|
120
|
பூங்கொடி யார்கைப் புள்ஒலி சிறப்பக்
|
|
|
|
|
|
கடவுள் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
|
|
|
கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
|
|
|
குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்துஎழ
|
|
|
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்துஎழ
|
|
125
|
ஊர்துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக்
|
|
|
|
|
|
கார்இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்,
|
உரை |
|
ஏஉறு மஞ்ஞையின் இனைந்ததுஅடி வருந்த
|
|
|
மாநகர் வீதி மருங்கில் போகிப்
|
|
|
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
|
|
130
|
மாதவி தனக்கு வழுஇன்று உரைத்தலும்
|
|
|
|
|
|
நல்மணி இழந்த நாகம் போன்றுஅவள்
|
|
|
தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப
|
|
|
இன்உயிர் இழந்த யாக்கையில் இருந்தனள்
|
|
|
துன்னியது உரைத்த சுதமதி தான்என்.
|
உரை |
|
|
|
|
துயில் எழுப்பிய காதை முற்றிற்று.
|
|
|