யாப்பு
பயிற்சி - 3
Exercise 3
1. பாட்டுக் கட்டுகிறேன் என்பது
அ) பேச்சு வழக்கு
ஆ) இலக்கிய வழக்கு
இ) பொய் வழக்கு
ஈ) கவிதை வழக்கு
அ) பேச்சு வழக்கு
2. செய்யுள் உறுப்புகள்
அ) ஐந்து
ஆ) ஆறு
இ) ஏழு
ஈ) எட்டு
ஆ) ஆறு
3. அடிப்படை அசை வகைகள்
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
ஈ) இரண்டு
4. ஈரசைச் சீர்கள் மொத்தம்
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
இ) நான்கு
5. புளிமா என்பது
அ) நிரையசை
ஆ) தளை
இ) வாய்பாடு
ஈ) தொடை விகற்பம்
இ) வாய்பாடு
6. நிரை, நேர், நேர் என்பதற்கான வாய்பாடு
அ) தேமாங்காய்
ஆ) புளிமாங்காய்
இ) கருவிளங்காய்
ஈ) கூவிளங்காய்
ஆ) புளிமாங்காய்
7. வெண்பாவின் இறுதியில் அமையும் வாய்பாடுகள்
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
அ) நான்கு
8. ஆறுவது சினம், என்பது
அ) நெடில் அடி
ஆ) அளவடி
இ) சிந்தடி
ஈ) குறளடி
ஈ) குறளடி
9. முதல் எழுத்துகள் ஒன்றி வருவது
அ) எதுகை
ஆ) முரண்
இ) மோனை
ஈ) இயைபு
இ) மோனை
10. குறள் வெண்பா என்பது
அ) ஐந்து வரிகளை உடையது
ஆ) நான்கு வரிகளை உடையது
இ) மூன்று வரிகளை உடையது
ஈ) இரண்டு வரிகளை உடையது
ஈ) இரண்டு வரிகளை உடையது