16. யாப்பு

யாப்பு

பாட அறிமுகம்
Introduction to Lesson


செய்யுள் இயற்றுதல் அல்லது கவிதை எழுதுதல் என்பது ஓர் இனிய அனுபவமாகும். அதற்கு (நம்) மொழியின் சொற்களைப் பற்றிய அறிவும் தெளிவும் பெறுவது அடிப்படை. சொல் இலக்கணப் பாடங்கள் வழியாக அத்தகு தெளிவைப் பெற்ற நீங்கள் அச்சொற்களையே உறுப்புகளாகக் கொண்டு செய்யுள் இயற்றும் யாப்பு இலக்கணங்களை இப்பாடத்தில் அறிந்து தெளிவு பெறலாம். சொற்களின் அணிவகுப்பே செய்யுள் ஆகிறது. எனினும் அச்சொற்களைப் பல்வேறு உறுப்புகளாகப் பிரித்துக்கொண்டே யாப்பு இலக்கணத்தை வகுத்து உள்ளனர். இங்கு, செய்யுள் உறுப்புகள் பற்றியும் செய்யுளின் வகைகள் பற்றியும் கற்றுணர்வோம்.