யாப்பு
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. எழுத்துகள் சேர்ந்து அசைக்கப்பெறுவது --------- ஆகும்.
எழுத்துகள் சேர்ந்து அசைக்கப்பெறுவது அசை ஆகும்.
2. அடி என்பதன் மறுபெயர் -------- ஆகும்.
அடி என்பதன் மறுபெயர் வரி ஆகும்.
3. நெடில் தனித்து வருவது -------- ஆகும்.
நெடில் தனித்து வருவது நேரசை ஆகும்.
4. விடா என்பது ---------- ஆகும்.
விடா என்பது நிரையசை ஆகும்
5. நாள், மலர் என்பன ---------- இறுதியில் அமையும் வாய்பாடுகள்.
நாள், மலர் என்பன வெண்பா இறுதியில் அமையும் வாய்பாடுகள்.
6. முதல் சீரின் இறுதியையும், இரண்டாம் சீரின் --------- இணைத்துக் கட்டுவதே தளை.
முதல் சீரின் இறுதியையும், இரண்டாம் சீரின் தொடக்கத்தையும் இணைத்துக் கட்டுவதே தளை.
7. மா முன் நேர் வருவது -------- ஆகும்.
மா முன் நேர் வருவது நேரொன்றிய ஆசிரியத் தளை ஆகும்
8. அறம் செய்ய விரும்பு என்பது --------- அடி வகை ஆகும்.
அறம் செய்ய விரும்பு என்பது சிந்தடி அடி வகை ஆகும்.
9. செய்யுளில் இறுதி ஒன்றி வருவது ----------- ஆகும்.
செய்யுளில் இறுதி ஒன்றி வருவது இயைபு ஆகும்.
10. தனிச்சொல் பெறாமல் வருவது -------- ஆகும்.
தனிச்சொல் பெறாமல் வருவது இன்னிசை வெண்பா ஆகும்.