தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

  • Warning: Use of undefined constant locations - assumed 'locations' (this will throw an Error in a future version of PHP) in temple_current_location_block_view() (line 112 of /html/tamilvu/public_html/sites/all/modules/temple_current_location/temple_current_location.module).
  • Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

tamilnadu_temples_new

அருள்மிகு அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

சிவன் குடைவரைக் கோயில்

ஊர் :

அரிட்டாப்பட்டி

வட்டம் :

மேலூர்

மாவட்டம் :

மதுரை

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

அரிட்டாப்பட்டி சிவன்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

மாங்குளம் தமிழ்ப்பிராமிக் கல்வெட்டுகள், அரிட்டாப்பட்டி பிராமிக் கல்வெட்டு, வரிச்சியூர் குடைவரைக் கோயில்கள்

சுருக்கம் :

அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் கழிஞ்சமலையில் உள்ளது. இம்மலையின் பழம்பெயர் திருப்பிணையன் மலை என்பதாகும். இம்மலையின் மேற்குப்பகுதியில் ஓர் அழகிய குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. இது சிவபெருமானுக்காக கி.பி.8-ஆம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். ஒரு சிறிய கருவறையும், அழகிய முன் மண்டபத்தையும் கொண்டு விளங்குகிறது. இயற்கையான பாறையிலிலேயே உருவாக்கப்பட்ட இலிங்கம் கருவறையில் உள்ளது. மண்டபத்தில் முன்வரிசையில் மட்டும் இரண்டு தூண்களும், இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. இக்கோயில் இன்று இவ்வூர் மக்களால் “இடைச்சி மண்டபம்“ என்று அழைக்கப்படுகின்றது. குடைவரைக் கோயிலின் வெளிப்புறச் சுவரில் விநாயகர், லகுலீசர் சிற்பங்கள் வெட்டப்பட்டுள்ளன. தென்னகத்தில் காணப்படும் ஒரு லகுலீசர் சிற்பங்களில் இது மிக முக்கியமானது எனலாம்.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்

கல்வெட்டு / செப்பேடு :

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

கருவறையில் தாய்ப்பாறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். முகமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. முகமண்டபத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் உள்ள கோட்டங்களில் இலகுலீசரும், கணபதியும் உள்ளனர். வெளிப்புறத்தில் நந்தி அமைந்துள்ளது.

கோயிலின் அமைப்பு :

குடைவரைக்கோயில் இது. ஒரு சிறிய அழகிய கருவறையையும் முகமண்டபத்தையும் கொண்டுள்ளது. கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். மூலவர் மலையின் பாறையிலிருந்தே வடிக்கப்பட்டுள்ளார். நுழைவுவாயிலில் இலகுலீசரும், கணபதியும் அமைந்துள்ளனர்.

அமைவிடம் :

அரிட்டாப்பட்டி-625 106, மதுரை

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டி என்னும் சிற்றூரின் மேற்கில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

மேலூர், அரிட்டாபட்டி

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம் :

மதுரை

தங்கும் வசதி :

மதுரை, மேலூர் விடுதிகள்
சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)