தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

tamilnadu_temples_new

அருள்மிகு திருச்சோற்றுத்துறை ஓதணவனேஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

ஓதணவனேஸ்வரர், தொலையாச் செல்வர், தானே முளைத்தெழுந்த பெருமான்

ஊர் :

திருச்சோற்றுத்துறை

வட்டம் :

திருவையாறு

மாவட்டம் :

தஞ்சாவூர்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

ஓதணவனேஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

சூரிய தீர்த்தம், காவிரி

ஆகமம் :

பூசைக்காலம் :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

திருவிழாக்கள் :

சப்தஸ்தானத் திருவிழா (ஏழுர் திருவிழா), மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தலவரலாறு :

அருளாளன் என்னும் பக்தனின் பசிப்பிணியை நீக்கியருள இறைவன் அள்ளஅள்ளக்குறையாத அட்சயப் பாத்திரத்தை வழங்கியதால் இத்தலம் திருச்சோற்றுத்துறை என வழங்கப்படுகிறது. சப்தஸ்தான திருவிழாவின் போது இங்கு அன்னம்பாலிப்பு நடைபெறுவது தனிச்சிறப்பு. இந்திரன், சூரியன், கௌதமர் வழிபட்ட தலம் இது.

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

பசுபதி கோயில்

சுருக்கம் :

திருச்சோற்றுத்துறை திருவாரூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலமாகும். சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்றுள்ளது. இக்கோயிலில் உள்ள ஏழுகன்னியர் சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. சோழர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் கலையழகு மிக்கவையாக இங்கு அமைந்துள்ளன. அய்யனார் சிற்பம் தனிச் சிறப்புடையது. நடுகல் வீரனது சொர்க்கம் செல்லும் காட்சி பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. இப்பலகைக் கல் இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. நாற்கரமாக நாகரபாணியில் அமைந்த இக்கோயில் எளிய வடிவமைப்புடையது. தேவகோட்டத்தில் அமைந்துள்ள சிற்பங்களுள் உள்ள முருகன் பிரம்மசாஸ்தா கோலங்கொண்ட அதாவது பிரம்மனின் கை இலச்சினைகளைக் கொண்டு விளங்கும் சிற்பம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு / செப்பேடு :

சோழர்காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

சதுரவடிவமான கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். கருவறை விமானத்தின் வெளிப்புறச் சுவரில் உள்ள தேவக்கோட்டங்களில் வடக்கில் முருகன் பிரம்மனை சிறையில் அடைத்த பிரம்மசாஸ்தா கோலத்திலும், தெற்கில் ஆலமர்ச் செல்வன், உள்ளனர். அர்த்தமண்டபக் கோட்டங்களில் முறையே தெற்கில் கணபதியும் காட்டப்பட்டுள்ளனர். பைரவர், காலனை வதைத்த காலாந்தகமூர்த்தி, அண்ணாமலையார், திருமால், ஏழுகன்னியர், கன்னிமூலை கணபதி, துர்க்கை, வாயிற்காவலர்கள், சண்டேசர், நடுகல் வீரன் சொர்க்கத்திற்கு செல்லும் பலகைக் கல் புடைப்புச் சிற்பம் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் எளிய அமைப்புடையது. கருவறை விமானம் ஒரு தளமுடையது. தாங்குதளத்திலிருந்து கூரைவரை கற்றளியாகவும், விமானம் சுதையாகவும் தற்போது அமைந்துள்ளது. எளிய அமைப்புள்ள தாங்குதளத்தைப் பெற்றுள்ளது. தாங்குதளம் உபானம், ஜகதி, முப்பட்டைக்குமுதம் ஆகிய உறுப்புகளைப் பெற்றும் விளங்குகிறது. பிரதிபந்த அதிட்டானம் என்பது அதிட்டானத்தில் அதாவது ங்குதளத்தில் புடைப்புச் சிற்பங்களைக் கொண்டிருத்தலாகும். கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதிகளில் அரைத்தூண்களுக்கிடையே கோட்டங்கள் அமைந்துள்ளன. கோட்டங்கள் மகரத்தோரணம் எனப்படும் அலங்கார வளைவுகளைப் பெற்றுள்ளன. மகரத்தோரணத்தின் நடுவே புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தேவகோட்டங்களில் இறையுருவங்கள் வடிக்கப்பெற்றுள்ளன. சுதையாலான விமானம் நாற்கரமாக காட்சியளிக்கிறது. இந்த வகை விமானம் நாகரபாணி எனப்படும். கருவறை சதுரவடிவமானது. இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் இடதுபுறம் அம்மன் திருமுன் காணப்படுகின்றது. அர்த்தமண்டபம், முகமண்டபம், இடைநாழிகை, மகாமண்டபம் அமைந்துள்ளது. முகமண்டபத்தில் நந்தி சிற்பமும், நால்வர் சிற்பங்களும் அமைந்துள்ளன. மூன்று நிலைகொண்ட இராஜகோபுரமும், இரண்டு திருச்சுற்றுகளும் கொண்டு விளங்குகிறது.

அமைவிடம் :

அருள்மிகு ஓதணவனேஸ்வரர் கோயில், திருச்சோற்றுத்துறை - 613 202, தஞ்சாவூர்

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.00 வரை

செல்லும் வழி :

தஞ்சாவூரிலிருந்து 10கி.மீ. தொலைவில் திருவையாறு வட்டத்தில் திருச்சோற்றுத்துறை அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

திருவையாறு, பசுபதிகோவில்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

பசுபதிகோவில்

அருகிலுள்ள விமான நிலையம் :

திருச்சி, சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

தஞ்சாவூர் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:49(இந்திய நேரம்)