தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

  • Warning: Use of undefined constant locations - assumed 'locations' (this will throw an Error in a future version of PHP) in temple_current_location_block_view() (line 112 of /html/tamilvu/public_html/sites/all/modules/temple_current_location/temple_current_location.module).
  • Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

tamilnadu_temples_new

அருள்மிகு பெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

திருவான்மிகை ஈஸ்வரமுடையார், பெருமுக்கல் உடையார், முக்யாசலேசுவரர்

ஊர் :

பெருமுக்கல்

வட்டம் :

மரக்காணம்

மாவட்டம் :

விழுப்புரம்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

முக்தியாலீஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

பெருமுக்கல் சீதாகுகை, உலகாபுரம் சிவன் கோயில், உலகாபுரம் விஷ்ணு கோயில், கண்டராதித்தப் பேரேரி, காலகண்ட பேரேரி, ஷகாளி கோயில், அய்யனார் கோயில்

சுருக்கம் :

இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உத்தமச் சோழன் காலம் முதல் தொடர்ச்சியான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விக்கிரமச்சோழன் காலத்தில் கற்றளியாக்கப்பட்டுள்ளது. இவ்வூரைச் சுற்றி மூன்று பெரிய குன்றுகள் இருப்பதால் பெருமுக்கல் (மூன்று பெரிய கற்கள்) என்ற பெயர் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இக்கோயில் அமைந்துள்ள மலையின் மேற்புறச் சரிவில் இயற்கையான குகை போன்றதோர் பகுதி உள்ளது. இதனை ஊரார் சீதாப்பிராட்டி குகை என்று அழைப்பர். இங்கு பாறையில் கீறல் பொறிப்புடன் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளது. கீறல் வளைவுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகும். இங்குள்ள கல்வெட்டு பெருந்தச்சன் என்பவனால் எழுதப்பட்டுள்ளது. இவை கி.பி.6-7 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது எனலாம்.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.12-ஆம் நூற்றாண்டு / விக்கிரம சோழன்

கல்வெட்டு / செப்பேடு :

கோயிற்சுவர்களிலும், பாறைகளிலும் 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூர்க் கல்வெட்டுகள் பல சுவையான செய்திகளைத் தருகின்றன. கோயில் நிலங்கள் ஏலம் கூறி விற்கப்பட்டன. 12 அடி கோலால் நிலங்கள் அளக்கப்பட்டன.கோயிலுக்கென தேவரடியார்கள் நியமிக்கப்பட்டனர். அனுமன் கோயிலில் உள்ள பலகைக் கல்லில் உத்தமசோழன் காலத்தில் அம்பலவன் கண்டாரதித்தன் என்பவன் ஒரு கோயில் கட்டிய விபரம் உள்ளது.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

தென்முகக் கடவுள், தூண் புடைப்புச் சிற்பங்கள்

கோயிலின் அமைப்பு :

பெருமுக்கல் ஊரின் மலை மேல் உள்ள இறைவனுக்கு எடுப்பிக்கப்பட்ட கோயில் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் கோயில் எனவும், பெருமுக்கல் உடையார் கோயில் எனவும், முக்யாசலேசுவரர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இராஜகோபுரமும், திருச்சுற்றும், மண்டபங்களும், கருவறையும் கொண்ட இக்கோயில் தொன்மை வாய்ந்ததாகும். முதல் குலோத்துங்கன் காலம் வரை செங்கல் கோயிலாக இருந்த இந்த சிவன் கோயில் விக்கிரமச் சோழன் காலத்தில் கற்றளியாக்கப்பட்டுள்ளது.

அமைவிடம் :

முக்தியாலீஸ்வரர் கோயில், பெருமுக்கல்-604 301, மரக்காணம் வழி, விழுப்புரம்

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவில் பெருமுக்கல் உள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

பெருமுக்கல்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

திண்டிவனம், விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

திண்டிவனம் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)