தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

தமிழ்

தமிழ் இணையக் கல்விக் கழகத்தை நிர்வாகச்சேவை மையம் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த இணையவழிக் கட்டண முறை நிர்வாகங்களுக்காக வழங்கப்படுகிறது. நிர்வாகங்களுக்காக இந்த விதிமுறைகளை அவ்வப்போது புதுப்பிக்கக்கூடும். மேலும், புதுப்பிக்கப்படும் போது ஏற்படும் மாற்றங்கள் நிர்வாகங்களுக்கு உடனடி பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய விதிமுறைகளை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. இந்தியா நிர்வாகிகளுக்கான குடியிருப்பு நாடு.

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

இணையவழிக் கட்டண வசதியைப் பயன்படுத்துவதற்கு முன் இதில் உள்ள விதிமுறைகளை கவனமாகப் படிக்கவும். இந்த இணையதளத்தில் இணையவழிக் கட்டணம் செலுத்துவதால் இவ்விதிமுறைகளை நீங்களும் ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துகிறது. இவ்விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால் இந்த வசதியைப் பயன்படுத்த வேண்டாம்.

பணப்பரிவத்தனைகள் அனைத்தும் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை: -

உங்கள் தனிப்பட்ட கடவுச்சொல்லுடன் உள்நுழையும்போது, ​​கடவுச்சொல் சரியாக பொருத்தும் சமயத்தில் சேவைகளின் விளக்கம் உங்கள் தேவைக்கு ஏற்ப பெறமுடியும். பொதுவாக கட்டணம் முன்கூட்டியே செலுத்தப்படவேண்டும். (அதாவது உங்கள் செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முன்).

மேலே, குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்டணங்களும் இந்திய ரூபாயில் உள்ளவை. எந்த நேரத்திலும் கட்டணங்களை மாற்றுவதற்கான உரிமையை நிர்வாகத்திற்கு இருக்கிறது.

நீங்கள் செலுத்தும் கட்டணம் பொதுவாக இரண்டு வேலை நாட்களுக்குள் நிர்வாகக் கணக்கை வந்து அடையும்.

தவறான கணக்கு எண் அல்லது தவறான தனிப்பட்ட விவரங்களை நீங்கள் மேலே காட்டியிருந்தால் நீங்கள் செலுத்தும் கட்டணம் சரியான நிர்வாகக் கணக்கை அடையாது. நிர்வாகக் கணக்கை அடையாத கட்டணத்திற்கு நிர்வாகம் பொறுப்பு ஏற்க முடியாது. மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் கடன் / பற்று அட்டையில் பிடிக்கப்பட்ட கட்டணத்திற்கோ அல்லது நிராகரிக்கப்பட்ட கட்டணத்திற்கோ நிர்வாகம் பொறுப்பு ஏற்க முடியாது.

அட்டை வழங்கியவர் பணம் செலுத்துவதை மறுத்தால், நிர்வாகம் இந்த உண்மையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. உங்கள் கணக்கிலிருந்து கட்டணம் கழிக்கப்பட்டுள்ளதா என்பதை உங்கள் வங்கி / கடன் / பற்று அட்டை வழங்குபவரிடமே சரிபார்க்க வேண்டும்.

எந்தவொரு நிகழ்விலும், எந்தவொரு பயன்பாட்டிற்கும், இணையத்தைப் பயன்படுத்த இயலாமை, அல்லது இந்த தளத்தின் பயன்பாட்டின் முடிவுகள், இந்த தளத்துடன் இணைக்கப்பட்ட எந்தவொரு வலைத்தளங்கள், அல்லது அனைத்து தளங்களிலும் உள்ள பொருட்கள் அல்லது தகவல்களுக்கு எழும் எந்தவொரு சேதத்திற்கும் நிர்வாகம் பொறுப்பேற்காது. உத்தரவாதம், ஒப்பந்தம், குற்றம் அல்லது வேறு ஏதேனும் சட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் ஏற்படும் சேதங்களின் சாத்தியம் குறித்தும் அறிவுறுத்தப்படமாட்டாது.

பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை

வாடிக்கையாளர் தங்கள் சேவைக் காலத்தை நிறைவுச் செய்வதற்கு முன்பு நிர்வாகத்தை விட்டு வெளியேறினால், சேவைக் கட்டணத்தைத் திருப்பிச் செலுத்த இயலாது.

நிர்வாகத்தால் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழல் ஏற்படின் அசல் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்ட கடன் / பற்று அட்டையின் மூலம் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்படும். மேலும், கட்டணத்தைப் பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் நிர்வாகம் கட்டணத்தைத் திருப்பிதத் தராது.

தனியுரிமைக் கொள்கை

இந்த தனியுரிமைக் கொள்கை நிர்வாகம் வழங்கும் அனைத்து தயாரிப்புகள், சேவைகள் மற்றும் வலைத்தளங்களுக்கும் பொருந்தும். சில நேரங்களில், எங்கள் தயாரிப்புகளை இன்னும் விரிவாக விளக்க குறிப்பிட்ட தனியுரிமை அறிவிப்புகள் அல்லது உதவி மையப் பொருட்கள் இடுகையிடப்படுகிறது.

இந்த தனியுரிமைக் கொள்கையைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்கள் இணையதளத்தின் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது எங்களுக்கு எழுதலாம். நாங்கள் சேகரிக்கும் தகவல்களை எங்கள் நிர்வாகத்தின் மூலம் பயன்படுத்தலாம்.

தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள்

எந்த நேரத்திலும் எந்த காரணமும் இல்லாமல் இந்த தனியுரிமை அறிக்கையை மாற்ற / திருத்த / அகற்றுவதற்கான முழு உரிமையும் நிர்வாகத்திடமே இருக்கும். நிர்வாகம் மற்றும் எந்தவொரு பயனருக்கும் நிர்வாக வலைத்தளத்தைப் பார்வையிடுவது அல்லது எந்தவொரு அடையாளம் காணும் தகவலை வழங்குவது ஆகியவற்றுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் உருவாக்குவது என்பது இல்லை.

தேவையில்லா அழைப்புக் கொள்கை

எங்கள் பக்கத்தில் இருந்து குறுஞ்செய்தி / மின்னஞ்சல் விழிப்பூட்டல்கள் / தொடர்புகளை நிறுத்த விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கைப்பேசி எண்ணுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்: tva@tn.gov.in உங்கள் எச்சரிக்கை பட்டியலில் இருந்து நீங்கள் விலக்கப்படுவீர்கள்.

தொடர்பு விபரங்கள்:

மின்னஞ்சல்: tva@tn.gov.in

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2019 11:15:52(இந்திய நேரம்)