2. மீன்களை உணவை அடிப்படையாகக் கொண்டு பிரித்தல்
பலவகை உணவை உண்ணும் மீன்கள் (Euryphagic)
இவ்வகை மீன்கள் கலப்பு வகை உணவுகளை உண்ணும் தன்மை கொண்டது.
சில வகை உணவை உண்ணும் மீன்கள் (Stenophagic)
இவ்வகை மீன்கள் குறிப்பிட்ட ஒரு சில வகை உணவுகளை மட்டும் உண்ணும் தன்மை கொண்டது.
ஒரே வகை உணவை உண்ணும் மீன்கள் (Monophagic)
இவ்வகை மீன்கள் ஒரே வகை உணவை மட்டும் உண்ணும் தன்மை கொண்டது
3. தாவர வகைகளை உண்ணும்மீன்கள் / தாவர உண்ணிகள் (Herbivoure fishes)
நீரில் உள்ள பாசிகளையோ அல்லது சற்றுவளர்ச்சி அடைந்த சிறு தாவரங்களையோ உண்ணும் மீன்கள் (எ.கா) காவேரி கெண்டை (லேபியோ பிமரியேட்டஸ்), புல் கெண்டை (பீனோபாரின் கோடான் ஜடெல்லா)
4. விலங்கு வகைகளை உண்ணும் மீன்கள் / விலங்குண்ணிகள் (Carnivore fishs)
இவ்வகை மீன்கள் நீரில் வாழும்சிறு விலங்கு இன உயிரினங்களை மட்டும் உண்ணும் தன்மை கொண்டது (எ.கா) விரால் மீன்கள் (சன்னா ஸ்டிரையேடஸ்), நன்னீர் கெளுத்தி (வல்லாகு அட்டு)
5. அனைத்துண்ணிகளை உண்ணும் மீன்கள் (Omnivore Fishes)
இவ்வகை மீன்கள் நீரில் வாழும் விலங்கினங்களையோ அல்லது தாவர இனங்களையோ உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டது. (எ.கா) கறிமீன்(எட்ரோபிளஸ் சுரடென்சிஸ்), சாதாக்கெண்டை (சிம்தினஸ் கார்பியோ), தேளி மீன் (கிலாரியஸ் பட்ராகஸ்).
6. சிதைவுண்ணி மீன்கள் (Detritus Fishes)
இவ்வகை மீன்கள் நீரில் காணப்படும் சிதைந்த அல்லது மட்கிய உயிரினங்களை உண்ணும் தன்மை கொண்டது (எ.கா) மடவை மீன்கள் (முகில் செபாலஸ்), காக்கா கெண்டை (லேபியோ கால்பசு).
7. பூச்சிகளை உண்ணும் மீன்கள் (Insectivore fishes)
இவ்வகை மீன்கள் நீரில் வாழும் சிறு சிறு பூச்சிகளை ணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டது (எ.கா) டிரவுட் (Trout)
8. மெல்லுடலிகளை உண்ணும் மீன்கள் (Malacovore fishes)
இவ்வகை மீன்கள் நத்தை போன்ற மெல்லுடலிகளை உணவாகக் கொள்கின்றன
9. மீனினங்களை உண்ணும் மீன்கள் (Pisivore fishes)
இவ்வகை மீன்கள் தன் இனத்தை தவிர தன்னை விடச் சிறய வகை மீன்களைஉணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டது. (எ.கா) ஊளி மீன் (ஸ்பைரினா ஜெல்லோ).
10. தன் இணத்தையே உண்ணும் மீன்கள் (Cannabalistic fishes)
இவ்வகை மீன்கள் தன் இனத்தைச் சார்ந்த இளம் உயிரிகளையும் தன்னைவிட அளவில் சிறிய மீன்களையும் உணவாகக் கொள்கின்றன. (எ.கா) விரால் (சன்னாமருலியஸ்), கொடுவா மீன் (லேட்டஸ் கல்காரிபர்).
11. நீர் மட்டத்தி அடிப்படையில் மீன்களை பிரித்தல்
மேல்மட்ட மீன்கள் (Surface feeder)
இவ்வகை மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் உள்ள தாவர விலங்கு நுண்மிதவைகளை மட்டும் உணவாக உட்கொள்ளும் (எ.கா) கட்லா வெள்ளிக் கெண்டை
நடுமட்ட மீன்கள் (Column feeder)
இவ்வகை மீன்கள் நீரின் நடுமட்டத்தில் உள்ள நுண் மிதவைகளை உணவாக உட்கொள்ளும் (எ.கா) ரோகு புல் கெண்டை
அடிமட்ட மீன்கள் (Bottom feeder)
இவ்வகை மீன்கள் நீரின் அடிமட்ட பகுதியில் உள்ள சிதைந்த தாவர மற்றும் விலங்குகளை உணவாக உட்கொள்கின்றன (எ.கா) மிர்கால், சாதா கெண்டை
12. லேபெடோஃபேஜி (சேதிலுண்ணி மீன்கள்)
இவ்வகை மீன்கள் மற்ற இன மீன்களின் செதில்களை உணவாக உட்கொள்ளும் (எ.கா) சண்டா நாமா
13. பீடோஃபேஜி
இவ்வகை மீன்கள் மற்ற இன மீன்களின் முட்டைகளையோ அல்லது இளம் உயிரிகளையோ உணவாக உட்கொள்கின்றன (எ.கா) எட்ரோப்ளஸ் மாக்குலேடஸ்
14. உளஃபேஜி அல்லது ஓவாஃபேஜி
இவ்வகை மீன்களின் இளம் உயிரிகள் தன் தாயின் கருப்பையில் உருவாகும் முட்டைகளையே உட்கொள்ளும் தன்மை கொண்டது. (எ.கா) அலாமியஸ் பெலாஜிகஸ்இ அலாமியஸ் சூப்பர்சிலியோசஸ்
15. அடல்ஃபோபேஜி அல்லது எம்ரியோஃபேஜி
இவ்வகை மீன்கள் தன்னுடன் பிறக்கும் சகோதரத்துவ உயிரிகளையே உணவாக உட்கொள்ளும்.
16. அடித்து உண்ணும் மீன்கள்
இவ்வகை மீன்கள் நீரில் வாழும் பிற மீன்களை கொன்று உண்ணும் வகையைச் சார்ந்தது அதwற்கேற்ப அடித்து உண்ணும் மீன்களில் பற்களின் அமைப்பு, வாய், செவுள் மடிப்புகள் மற்றும் இரைப்பை சற்று மாறுபாடு அடைந்துள்ளது. (எ.கா) வாளைமீன், நெய மீன, ஊளி மீன்.
17. மேய்ந்து உண்ணும் மீன்கள் (Grazer fishes)
இவ்வகை மீன்கள் ஆடு மாடுகளைப் போன்றுஅசையிட்டு உணவு ட்கொள்ளும் தனித்தன்மை கொண்டது இவ்வகையை சார்ந்த மீன்கள் பொதுவாக கூட்டமாகத் தான்செல்கின்றனமேலும் இநத மீன்கள் பவளப் பாறைகளின் பாலிப்புகளையும் அதன் மேல் படர்ந்து காணப்படும் பாசிகளையும் கடித்து உண்கின்றன. (எ.கா) கிளி மீன் வண்ணத்துப்பூச்சி மீன்.
18. வடிகட்டிஉண்ணும் மீன்கள் (Stainers)
இவ்வகை மீன்களின் செவுள் மடிப்புகளால் நீரினை வடிகட்டுவதன் மூலம் அதில் உsள்ள நுண்மிதவை உணவுகளை உணவாக உட்கொள்கின்றன இவ்வகை மீன்களுக்கு நீரினை வடிகட்டுtவதற்கேற்ப செவுள் மடிப்புகள் அதிக எண்ணிக்கையில் நெருக்கமாகவும் நீண்டும் காணப்படும். (எ.கா) சாளை மீன், வெள்ளிக் கெண்டை, அயிலை மீன்.
19. உறிஞ்சி உண்ணும் மீன்கள் (Suckers)
இவ்வகை மீன்கள் பெரும்பாலும் நீரின் அடிமட்டத்தில் வசிக்கின்றன இவ்வகை மீன்களுக்கு வாயானது உறிஞ்சுவதற்கு ஏற்ப மாறுபட்டு இறந்த அல்லது மட்கிய பொருட்களைஉறிஞ்சி உணவாகக் கொள்கின்றன. (எ.கா) பூனை மீன் / கெளுத்திமீன், ஸ்டர்ஜன் மீன்.
20. ஒட்டுண்ணி மீன்கள் (Parasites)
ஒட்டுண்ணி மீன்கள் பிற மீன்களின்உடலில் ஒட்டிக் கொண்டு அவற்றிலிருந்து தனக்கு தேவையான உணவை பெற்றுக் கொள்கின்றன (எ.கா) லாம்ரே மீன்கள்(Lampry), ஹேக்மீன்கள் (Hag fishes).
இவ்வகை மீன்களின் வாயானது நன்கு வளர்ச்சி அடைந்தும் ஒட்டுயிர் உடலை நன்கு பிடித்துக் கொள்வதற்கு ஏற்பவும் மாறுபாடு அடைந்துள்ளது.
Chapter -3 மீன்கள் தன் உணவை கண்டறியும் முறைகள்
21. பார்வையின் மூலம் உணவை கண்டறியும் மீன்கள் (Sight Feeders)
பார்வையின் திறன் மற்றும் கண்களின் இட அமைப்பு இவ்வகை மீன்களின் உணவைக் கணஙடறிவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது இவ்வகை மீன்கள் தனக்கு தேவையான உணவை பகல் மற்றும் இரவு நேரங்களிலேயே தேடிக் கொண்டு உட்கொள்கின்றன.
மேல்மட்ட மீன்களான மின்னோஸ் இன மீன்களின்கண்ணானது பக்க உணர்கோட்டிற்கு (Lateral line) மேற்புறத்தில் உள்ளதால் நீரின் மேல் உள்ள மிதவைகளை உணவாக உட்கொள்ளும்
கெளுத்தி மீன்களின் கண்ணானது பக்க உணர்கோட்டிற்கு கீழ்புறத்தில் cஉள்ளதால் அடிமட்ட நீரில் உள்ள உணவுகளைக் கண்டு அவற்றைஉட்கொண்டு உயிர்வாழ்கின்றன.
22. இரவு நேரங்களில் உணவு உண்ணும் மீன்கள் (Night feeders)
வாசனை மற்றும் சுவை மூலம் உணவைக் கண்டறிந்து இரவு நேரங்களில் மட்டும் உணவை உட்கொள்கின்றன (எ.கா) பூனை மீன் அல்லது கெளுத்தி மீன்.
Chapter-4 எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்ற மீன்கள் கையாளும் முறைகள்
23. ஏமாற்று வித்தை மீன்கள் (Comouflage)
குலுப்பிட் இன மீன்கள்
இவ்வகை மீன்களின் உடலமைப்பானது சில்வர் நிறத்தைப் போன்று பளப்பளப்பாக உள்ளதால் சூரிய ஒளி நேரில்படும் போது அதிகமாக பிரதிபலிப்பதால் எதிரி மீன்களின்பார்வை மங்குகின்றன எனவே குலுப்பிட இன மீன்களை தப்பித்துச் செல்கின்றன.
சிலவகை மீன்களின் உடலமைப்புபெட்டி போன்று உள்ளதால் எதிரி மீன்கள் அவற்றை உண்பதில் பல சிரமங்களை கொண்டுள்ளதால் இவ்வகை மீன்களை உட்கொள்வதை தவிர்க்கின்றன.
சில வகை மீன்கள் தடித்த நன்கு வளர்ச்சி அடைந்த முட்களைக் கொண்டுள்ளதால் தன் எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்றன (எ.கா) முள்ளம்பன்றி மீன்கள் (Porcupine fish), ட்ரிகர் மீன்கள்(Trigger fish)
24. பெரோமோன்கள்
சிலவகை மீன்கள் பெரோமோன்களை சுரக்கின்றன இந்த பெரோமோன்கள் தன் இனத்தைச் சார்ந்த மீன்களுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுக்கின்றன பெரோமோன்கள்எச்சறிக்கையை கொடுப்பதால்மற்ற மீன்கள் தன்னை எதிரி மீன்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள சிறந்தசில முறைகளை கையாளுகின்றன. (எ.கா) சப்ரினட் இன மீன்கள்(Cyprinids), இக்டாலுரிட் இன மீன்கள் (Ictalurids)
25. வேதியியல் காரணிகள் / முறைகள் மூலம் எதிரிகளை தவிர்த்தல்
இவ்வகை மீன்கள் நச்சுத் தன்மை உள்ள வேதியியல் பொருட்களை சுரக்கின்றன. இதனால் எதிரி மீன்கள் இவ்வகை மீன்fகளை தொடுவதை தவிர்த்துக் கொண்டு விட்டுச் செல்கின்றன
26. எலக்ட்ரான் ஏற்பி மீன்கள
சில வகை மீன்கள் தன் உடல் பகுதிகளில் எலக்ட்ரான ஏற்பிகளைக் கொண்டுள்ளது இந்த எலக்ட்ரான் ஏற்பிகள் மின்சாரத்தை வெளிவிடுவதால் மற்ற மீன்கள் இறந்து அதற்கு இரையாகின்றன. (எ.கா) மின்சாரதன்மையுள்ள விலாங்கு (Electric eel) குறிப்பாக எலக்ட்ரிக் விலாங்கு மீன்கள் 500-600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன
27. மெக்கனேரிசெப்டர் மீன்கள்
சில வகை மீன்களின் மத்திய உணர்கோடோ அல்லது உள்காதோ மிகச் சிறய அதிர்வுகளையும் நீந்தும் போது கண்டறியும் தன்மைக் கொண்டது இந்த அதிர்வுகளின் மூலம் தன்னை தன் எதிரிகளுடமிருந்து காத்துக் கொள்கின்றது.
Chapter - 5 மீன்களின் இடப்பெயர்ச்சி
28. மீன்களின் இடப்பெயர்ச்சி
மீன்கள் கூட்டமாகவோ அல்லது குழுக்களாகவோ ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உணவுக்காகவும் சூழ்நிலை மாறுபாட்டின் காரணமாகவும் நீரின் சமநிலைக்காகவும் மற்றும் இனப்பெருக்கத்திற்காகவும் செல்கின்றன.
மீன்களின் இடப்பெயர்ச்சி வகைகள்
மீன்கள் ஐந்து வகைகளில் இடப்பெயர்ச்சி செய்கின்றது
29. அனோடிரோமஸ் மீன்கள் (Anadromous fishes)
இவ்வகை மீன்கள் கடல் நீரில் வாழ்ந்தாலும் இனப்பெருக்கத்திற்காக ஆற்று புறங்களை நோக்கி இடம்பெயர்கின்றது இவைகள் ஆற்றுப் பகுதிகளிலேயே தன் முட்டைகளையோ அல்லது இளம் உயிரிகளையோ இடுகின்றன பின் (எ.கா)சால்மன் மீன்கள். இந்த இளம் உயிரிகள் கடலை நோக்கிச் சென்று அங்கே வாழ்கின்றது பிறகு இனப்பெருக்கத்திற்கு ஆற்று புறங்களை வந்தடைகின்றன
30. கேடோடிரோமஸ் மீன்கள் (Catadromous fishes)
இவ்வகை மீன்கள் நன்னீர் நிலைகளில் வழ்ந்தாலும் இனப்பெருக்கத்திற்காக கடல் நீரினை நோக்கி இடப்பெயர்ச்சி செய்கின்றது. அங்கே இம்மீன்கள் தன் முட்டைகளை வெளிவிட்டு பின் நன்னீர் நிலைகளை அடைகின்றன இந்த முட்டைகளிலிருந்து வரும் இளம் உயிரிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் வளர்ச்சி அடைந்து அவைகளும் கடல் நீரிலிருந்து நன்னீர் நிலைகளை அடைகின்றன (எ.கா) விலாங்கு மீன்கள்
31. ஆம்பிடரோமஸ் மீன்கள் (Amphidromous fishes)
இவ்வகை மீன்கள் நன்னீர் நிலைகளிலிருந்து கடல் நீருக்கும் கடல் நீரிலிருந்து நன்னீர் நிலைகளுக்கும் இடப் பெயர்ச்சி செய்கின்றன இவ்வகை இடப்பெயர்ச்சியானது குறிப்பாக இனப்பெருக்கத்திற்காக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
32. பொட்டமோடிரோமஸ் மீன்கள் (Potamodromous fishes)
இவ்வகை மீன்கள் நன்னீர் நிலைகளுக்குள்ளேயே உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக இடப்பெயர்ச்சி செய்கின்றன (எ.கா) கெண்டை மீன்கள்
33. ஓசனோடிரோமஸ் மீன்கள் (Oceanodromous fishes)
இவ்வகை மீன்கள் கடல் நீருக்குள்ளேயே உணவு இனப்பெருக்கத்திற்காக இடப்பெயர்ச்சி செய்கின்றன (எ.கா) சூரை மீன் (Tauna)