தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆசிரியர் பட்டயப் பயிற்சியின் விதிமுறைகள்

1. சேர்க்கைத் தகுதி

ஆசிரியர் பட்டயப் பயிற்சி பாடத் திட்ட வகுப்புகளில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 10+2 (அல்லது) தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மேற்சான்றிதழ் நிலை 3 (அல்லது) தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சிகரம் நிலை (அல்லது) அதற்கு ஈடான கல்வி நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பட்டப் படிப்பில் சேருவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு 17 என வரையறுக்கப்பட்டுள்ளது.

2. கால அளவு

ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிக்கும் கால அளவு “ஓராண்டு” படிப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்த ஆண்டிலிருந்து அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்குள் இக்கல்வியை நிறைவு செய்தல் வேண்டும்.

3. பாடத்திட்டம்

ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான பாடத்திட்டம் :

தாள் குறியீடு
(Paper Code)
தாள்கள் (Papers)
TT01
தமிழ்மொழி கற்றல்-கற்பித்தல்
TT02
அடிப்படைத் தமிழ் இலக்கணம்
TT03
தமிழில் படைப்பாக்கத் திறன்
TT04
செய்முறைப் பயிற்சிகள்

மேற்குறித்த பாடங்கள் இணைய வழிப் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன.

4. தேர்வு முறை

ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள TT01, TT02, TT03 ஆகிய தாள்களுக்கு தொடர் மதிப்பீட்டுத் தேர்வுகள் இணைய வழியாக நடத்தப்படும். இறுதி எழுத்துத் தேர்வுகள் 6 மாத காலப் பிரிவில் த.இ.க.-வின் தொடர்பு மையங்கள் மூலம் நடத்தப்படும். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு, பிப்ரவரி ஆகிய இரு திங்கள்களில் த.இ.க. குறிக்கும் கால அட்டவணைப்படி இத்தேர்வு நிகழும். இறுதி எழுத்துத் தேர்வு ஒவ்வொன்றும் 3 மணி நேரக் கால அளவைக் கொண்டதாக இருக்கும்.

ஒவ்வொரு தாளுக்கும் மொத்த மதிப்பெண் 100. ஒவ்வொரு தாளுக்கும் தொடர் மதிப்பீட்டுத் தேர்வு மதிப்பெண் 25, இறுதித் தேர்வு மதிப்பெண் 75, ஆக மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

4.1. ஒவ்வொரு தாளுக்கும் (தாள் 4 - செய்முறைப் பயிற்சித் தேர்வு நீங்கலாக)
தேர்வு முறை
தேர்வுகளின் எண்ணிக்கை
மதிப்பெண்
தேர்வு நேரம்
கால இடைவேளை
தொடர் மதிப்பீடு
1
25
30 நிமிடங்கள்
6 மாதங்களுக்கு ஒரு முறை
இறுதித் தேர்வு
1
75
3 மணி
6 மாதங்களுக்கு ஒரு முறை ஆகஸ்டு, பிப்ரவரி
மொத்தம்
100
4.2 தாள் 4 - செய்முறைப் பயிற்சித் தேர்வு
தேர்வு முறை
தேர்வுகளின் எண்ணிக்கை
மதிப்பெண்
தொடர் மதிப்பீடு
1
50
இறுதித் தேர்வு
1
50
மொத்தம்
100
அட்டவணை – ஆசிரியர் பட்டயப் பயிற்சிற்கான படிப்பு
(பருவமுறைத் தேர்வுத் திட்டம்)
பருவம்
(Semester)
தாள் பொருள்
(Paper Content)
தாள்கள்
(Papers)
முதற்பருவம்
(Ist Semester)
TT01 - தமிழ்மொழி கற்றல்-கற்பித்தல்
2
TT02 - அடிப்படைத் தமிழ் இலக்கணம்
இரண்டாம் பருவம்
(II nd Semester)
TT03 - தமிழில் படைப்பாக்கத் திறன்
2
TT04 - செய்முறைப் பயிற்சிகள்

இரண்டு பருவத்திற்கான தேர்வுகள் ஒவ்வோராண்டும் பிப்ரவரி, ஆகஸ்டுத் திங்களில் நடைபெறும்.

5. கட்டண விவரம்

தமிழாசிரியர் பட்டயப் பயிற்சி பாடத்திட்டங்களின் பதிவு மற்றும் தேர்வுக் கட்டணம் பற்றிய விவரம் பின்வருமாறு.

வ. எண்.
பொருள்
இந்திய மாணவர்கள்

கட்டணத் தொகை (ரூபாயில்)
அயல்நாட்டு மாணவர்கள்

கட்டணத் தொகை USD
1
பதிவுக் கட்டணம் (தாள் ஒன்றுக்கு)
ரூ.500/-
USD.20 $
2
தேர்வுக் கட்டணம் (தாள் ஒன்றுக்கு)
ரூ.200/-
USD.8 $
3
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டிய சான்றிதழ்க் கட்டணம்
ரூ.200/-
ரூ.200/-

மேலும், த.இ.கவால் குறிப்பிடப்பட்டுள்ள தாமதக் கட்டணம், நகல் சான்றிதழ்க் கட்டணம் போன்ற பிற கட்டணங்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும்.

6. இறுதித் தேர்வுக்கான வினாத்தாள் அமைப்பு

இறுதித் தேர்வின் வினாத்தாள்கள் கீழ்க்காணும் வகையில் அமையும்.

ஒவ்வொரு வினாத்தாளும் மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும்.

பிரிவு
வினா வகை
தாள் 1,2,3க்கான மதிப்பீட்டு முறை
பிரிவு - 1
ஒரு சொல்/தொடர் விடை வினாக்கள்(15 வினாக்களுக்கும் விடை அளிக்க வேண்டும்)
15x1=15
பிரிவு - 2
ஒரு பத்தி விடை வினாக்கள் (8 வினாக்களில் எவையேனும் 5)
5x3=15
பிரிவு - 3
பெருவிடை வினாக்கள் (3 வினாக்களுக்கு ஒவ்வொரு வினாவுக்கும் மூன்று பக்க அளவுக்குள் விடை அளிக்க வேண்டும்) (ஒவ்வொரு வினா எண்ணின் கீழும் ‘அ’ மற்றும் ‘ஆ’ எனக் கொடுத்திருக்கும் இரு பிரிவுகளில் ஒன்றனுக்கு விடை அளிக்க வேண்டும்)
3x15=45
மொத்த மதிப்பெண்கள்
75
6.1. தாள் 4 - செய்முறைப் பயிற்சித் தேர்வு (தொடர் மதிப்பீடு)
பிரிவு
மதிப்பெண்
உற்று நோக்கல் படிவம் நிரப்புதல்
10
நுண்ணிலைக் கற்பித்தல் பயிற்சி
10
பாடம் கற்பிப்புத் திட்டம் தயாரித்தல்
10
பாடநூல் ஆய்வு
10
ஒரு வகுப்பு நடத்தப்பட்ட காணொலிப் பதிவு (10 முதல் 15 நிமிடங்கள்)
10
மொத்தம்
50
6.2 தாள் - செய்முறைப் பயிற்சித் தேர்வு (இறுதித் தேர்வு)

இறுதித் தேர்வில் மாணவர்கள் நேரடியாக வகுப்புகள் நடத்த வேண்டும். அத்தேர்வு இணையவழியிலோ அல்லது காணொலியாகப் பதிவு செய்து அனுப்பும் முறையிலோ நடத்தப்படும்.

7. தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்படும்; தனித்தனியே ஒவ்வொரு மாணவரும் காணும் வகையில் முடிவுகள் தெரிவிக்கப்படும். பட்டயப் படிப்பிற்கான சான்றிதழ்கள் சென்னை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும். அச்சான்றிதழ்கள் மாணவர்களுக்கு அவர்களது தொடர்பு மையங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

8. தேர்ச்சியும் தர மதிப்பீடும்

ஒவ்வொரு தாளுக்கும் 5 தரப் புள்ளி மதிப்பீட்டு முறையில் தேர்வு முடிவுகள் வழங்கப்படும். தரக் குறியீடும், தரப் புள்ளிகளும், அவற்றிற்கு இணையான மதிப்பெண்களும் கீழ்க்காணும் அட்டவணையில் உள்ளவாறு அமையும் :

தரக் குறீயிடு
தரப் புள்ளி
100-க்கான மதிப்பெண்கள்
A+
4.5 - 5.0
90 முதல் 100
A
4.0 - 4.45
80 முதல் 89
B+
3.5 - 3.95
70 முதல் 79
B
3.0 - 3.45
60 முதல் 69
C+
2.5 - 2.95
50 முதல் 59
C
2.0 - 2.45
40 முதல் 49

ஒவ்வொரு தாளிலும் தேர்ச்சி பெறக் குறைந்த அளவு 2 தரப் புள்ளிகள் எடுக்க வேண்டும்.

குறிப்பு : இக்கல்வித்திட்டம் தன்னார்வலர்களுக்குத் தமிழ்க் கற்பித்தல் பயிற்சி வழங்குவதற்கானது மட்டுமே. இதில் பயின்றவர்கள் எவ்வித வேலைவாய்ப்பும் கோர இயலாது.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-11-2024 15:08:49(இந்திய நேரம்)