தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நீங்கள் படிக்க முடியுமா ?

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நீங்கள் படிக்க முடியுமா ?
  • தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் சான்றிதழ்க் கல்வி, பட்டயக் கல்வி, மேற்பட்டயக் கல்வி, இளநிலைப் பட்டக் கல்வி ஆகியவற்றை வழங்கி வருகின்றோம்.
  • முதுநிலைப் பட்டக்கல்வியையும், ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்); முனைவர் (பி.எச்டி) பட்டங்களுக்கான கல்வியையும் விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, இப்பொழுது வழங்கப்படுவதில்லை.
  • தற்பொழுது நாங்கள் வழங்கி வரும் மேலே குறிப்பிட்ட கல்வித் திட்டங்களில் வெளிநாட்டில் உள்ள மாணாக்கர்கள் மட்டும்தாம் பயின்று வருகின்றனர். அவர்களுக்குரிய தேர்வுகளை அந்த நாடுகளில் அமைக்கப் பெற்றுள்ள இக்கல்விக்கழகத்தின் தொடர்பு மையங்களில் மட்டுமே (Contact Centres) நடத்தி வருகிறோம்.
  • இங்கு, சென்னையில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் மட்டுமே தேர்வுகள் எழுத முடியும். தமிழ் நாட்டின் மாவட்டங்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் குறிப்பிட்ட அளவில் மாணவர் சேர்க்கை இருந்தால் தொடர்பு மையங்கள் நிறுவும் திட்டமும் உள்ளது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே இது அமையும்.
  • எனவே தாங்கள் சான்றிதழோ, பட்டயமோ, பட்டமோ பெற விரும்பினால், தற்போதுள்ள நிலையில் தேர்வுகளைச் சென்னையில் மட்டுமே எழுத முடியும்.
  • மேலும் தனியாக விண்ணப்பப் படிவங்கள் இல்லை. இணையத்தளத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம்.
  • பாடங்கள், நூல்களைப் படிக்கக் கட்டணம் ஏதும் இல்லை. சான்றிதழ் / பட்டம் பெற விரும்பினால் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்; மேலும் கட்டணங்களைத் தேர்வு எழுதுவதற்கு முன்னர் செலுத்தினால் போதும்; உடனடியாகச் செலுத்தத் தேவையில்லை.
  • கல்வி, மின்நூலகம் பற்றிய மற்ற தகவல்கள் அனைத்தையும் எங்களது இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
  • பாடதிட்டங்களில் படிப்பதற்கான முன் தகுதி, வயது வரம்பு, விதிமுறைகள் போன்றவற்றிற்கு இணைய தளத்தைப் பார்க்வும்.
  • மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள,[email protected]

த.இ.க. இணையத்தள விவரங்களை அறியும் நடைமுறை

த.இ.க. இணையத்தளத்தில் நுழைய:

  • இணையத்தள முகவரியில் www.tamilvu.org என்று தட்டச்சு செய்து, பிறகு நுழைவுப் பொத்தானை அழுத்துக,
  • த.இ.க. இன் நுழைவாயில் என்ற பக்கம் தோன்றும். அப்பக்கத்தில் உள்ள நுழைவாயில் (Entrance) பொத்தானைச் சுட்டுக அறிமுகப் பக்கம் தோன்றும். இசையுடன் கூடிய பக்கத்தைப் பார்க்க View Flash Introduction என்ற இடத்தில் சுட்டுக.
  • த.இ.க. தளப்பொருள்களின் பட்டியல் தோன்றும். தேவையானதைத் தேர்வு செய்து சுட்டவும். எடுத்துக்காட்டு: மாணவருக்காக மேல் சுட்டினால். மாணவருக்கான பதிவு / புதுப்பயனர் சேர்க்கைக்கான சாளரம் தோன்றும்.

ஒரு மாணவராகச் சேருவது எப்படி?

  • புதிய பயனர் த.இ.க. இன் பாடத் திட்டங்களில் சேர, “மாணவராகச் சேர இங்குச் சுட்டவும்” என்பதின் மேல் சுட்டுக.
  • மாணவர் சேர்க்கைப் படிவம் தோன்றும். உங்கள் முழு விவரங்களைச் சேர்க்கைப் படிவத்தில் பூர்த்தி செய்து பிறகு அனுப்பவும்: இப்போது அளிக்கப்படும் மின் அஞ்சல் முகவரியையே எப்போதும் பயன்படுத்தவேண்டும். அதுவே உங்கள் பயனர் முகவரி. இவற்றோடு கூட உங்கள் கடவுச் சொல்லையும் பதிவு செய்து கொள்ளவும். கடவுச் சொல்லை நினைவில் வைத்துக் கொள்க. இதைப் பயன்படுத்தியே த.இ.க.வின் பாடத்திட்டங்களையோ பிறவற்றையோ பார்வையிட முடியும்.
  • உங்கள் விவரங்களைச் சரிபார்க்கவும். நீங்கள் ஏதாவது ஒரு விவரத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினால், “திருத்தம் (EDIT)” பொத்தானைச் சுட்டுக. இல்லாவிடில், “NEXT” பொத்தானைச் சுட்டுக.
  • இப்பொழுது, ஒரு மாணவர் சேருவதற்கான பாட விவரங்கள் தோன்றும்.
  • சான்றிதழ் / பட்டயம் / மேற்பட்டயம் / பட்டம் போன்ற கல்வித் திட்டத்தில் சேர, தேவையான இணைப்பைத் தேர்வு செய்க.
  • தாள்களின் சேர்க்கைப் பட்டியல் தோன்றும். தாள்களைத் தேர்வு செய்த பிறகு “NEXT” பொத்தானைச் சுட்டுக.
  • நீங்கள் இணையத்தளம் வழியாகத் தாள்களுக்கான கட்டணம் மற்றும் தேர்வுக்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்றால், “இப்பொழுது செலுத்துக (PAY NOW)” அல்லது “பின்னர் செலுத்துக (PAY LATER)” பொத்தானைச் சுட்டுக.
  • சேர்க்கைக்குப் பிறகு உங்கள் மின் அஞ்சல் முகவரி திரையில் தோன்றும்.

நூலகப் பொருள்களைப் பார்ப்பதற்கான நடைமுறை

  • த.இ.க. தளப்பொருட்களில் தேவையான மற்றவற்றை அந்தந்தப் பொருள்களின் மேல் சுட்டி, பார்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு:

  • த.இ.க. முகப்புப்பக்கத்தில் நகரும் தளப்பொருள்களின் மேல் சுட்டியும் நேரடியாக வேண்டிய பக்கத்திற்குச் செல்லலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 15-10-2018 15:58:51(இந்திய நேரம்)