Primary tabs
மணிமேகலையில் வரும் புராணக் கூறுகளைச் சுட்டுக.
மணிமேகலை பௌத்த சமயச் சார்புடையது என்பதால் அச்சமயம் சார்ந்த சாதகக் கதைகள் பல புராணக் கூறுகளுடன் இடம் பெறுகின்றன. மணிமேகலா தெய்வம், புத்த பீடிகை, கந்திற் பாவை முதலான கடவுள் பாத்திரப் படைப்புப் பற்றிய கதைகள் புராணப் புனைவுகளே. இவற்றோடு இந்து சமயப் புராணக் கூறுகள் பற்றியும் பேசுகிறது. முருகன் கிரவுஞ்ச மலையைத் தகர்த்தது, திருமால் இராமாவதாரத்தில் கடலடைத்தது, வாமன அவதாரத்தில் மூவடியால் நிலம் அளந்து மாவலியை அழித்தது ஆகிய வரலாறுகள் உவமையாக எடுத்தாளப்படுகின்றன.