Primary tabs
2.5 தொகுப்புரை
தன்மை வினைமுற்றுகள் என்னும் தலைப்பிலான இப்பாடத்தில் தன்மை வினை என்பது பேசுவோரின் வினையைக் குறிக்கும் என அறிந்தோம். தன்மை வினைமுற்றுகளில் விகுதிகளே ‘தன்மை’ எனும் இடப் பொருளையும் ஒருமை/ பன்மையையும் உணர்த்துகின்றன என்று தெரிந்து கொண்டோம். தன்மை வினைமுற்றுகளில் ஒருமை பன்மை வேறுபாடுகளே உண்டு. இவை திணை, பால் உணர்த்தா என்பதும் வெளிப்படை. இவற்றுக்குரிய சில காலங்காட்டும் விகுதிகளைப் பற்றியும் அறிந்து கொண்டோம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II