தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A021362-உரிச்சொல் - சில குறிப்புகள்

  • 6.2 உரிச்சொல் - சில குறிப்புகள்

    உரிச்சொல் தொடர்பான மூன்று பாடங்களில் சில உரிச்சொற்களை அறிந்திருக்கிறீர்கள். நன்னூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை மொத்தம் நாற்பத்தைந்து சொற்களே ஆகும். தொல்காப்பியத்தில் நூற்றிருபது சொற்கள் காட்டப்பட்டுள்ளன. தமிழில் உள்ள உரிச்சொற்கள் இவ்வளவு தானா? எல்லா வகைச் சொற்களுக்கும் இலக்கணம் கூறும் நன்னூலில் அனைத்து உரிச்சொற்களையும் குறித்து விளக்க முடியாது என்பதனால், உரிச்சொற்களைப் பற்றி விரிவாகக் கூறும் நிகண்டுகளில் அவற்றைக் காணலாம் என நன்னூலார் தெளிவுபடுத்துகிறார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:06:50(இந்திய நேரம்)