தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

  • 3.1 வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
     

    உருபுகள் பெற்றுவரும் வேற்றுமைகள் இரண்டு முதல் ஏழு வரை மொத்தம் ஆறு என முன்னர்க் கூறப்பட்டது. இந்த ஆறு வேற்றுமைகளின் உருபுகள் வெளிப்பட நின்று தொடரும் தொடர் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் எனப்படும்.

    (எ.டு.)

    பாடத்தைப் படித்தான்
    -
    இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
    கத்தியால் குத்தினான்
    -
    மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
    மகளுக்குக் கொடுத்தான்
    -
    நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
    ஏணியில் இறங்கினான்
    -
    ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
    நண்பனது வீடு
    -
    ஆறாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
    வான்கண் நிலா
    -
    ஏழாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்


புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 19:36:21(இந்திய நேரம்)