தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

நாட்குறிப்பு

2.4 நாட்குறிப்பு

    புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர் ஆண்ட காலத்தில்
பிரெஞ்சுக்     கவர்னர்     டூப்ளே     என்பவருக்கு
உறுதுணையாகத் திகழ்ந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை.
இவருடைய நுண்ணறிவைக் கண்டு பிரெஞ்சுக்காரர்கள்
இவரைத்     தம்     திவானாக அமர்த்திக் கொண்டனர்.
தமிழ்மொழி தவிர தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு,
போர்ச்சுகீசிய மொழி அறிந்தவர். சோதிடவியலும் வான
இயலிலும் வல்லவரான இவர், சிறந்த தமிழ்ப் புரவலரும்
ஆவார். இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு எனில் அது
அவர் தம் கைப்படத் தமிழில் நாள்தோறும் எழுதிவைத்த
நாட்குறிப்பே. அவருடைய காலத்தில் யாருமே புரிந்திராத
அரியதோர் இலக்கியப் பணியை இதன்மூலம் பிள்ளை
செய்துள்ளார்.     இந்நாட்குறிப்பு     பெரும் வரலாற்றுக்
கருவூலமாகத் திகழ்கிறது என வியக்கின்றார் கே.கே.
பிள்ளை.     ரெஞ்சுக்காரர்களைப்     பற்றிய     அரிய
செய்திகளைத் தருவதோடு அவர் கையாண்ட எழுத்து
நடையே தமிழுலகிற்குப் புதுமையானதாகத் திகழ்கிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1

பிரபந்த வேந்தர் என்றழைக்கப்படுபவர் யார்?

2

கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்
பெறுபவர் யார்?

3

ப, ம, வ என்ற எழுத்துக்கள் அற்ற இலக்கியம்
எது?

4

அஷ்டப் பிரபந்தத்தை இயற்றியவர் யார்?

5

தொண்டை மண்டல சதகத்தை இயற்றியவர்
யார்?

6

வீரமாமுனிவரின் தமிழாசிரியர் யார்?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:36:48(இந்திய நேரம்)