தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

பாடம் 4-A04144 : பத்தொன்பதாம் நூற்றாண்டு

    பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலேயர் ஆட்சி
ஓங்கிய காலம். சைவ, வைணவ சமயங்கள் தமக்குள்
சண்டையிட்டுக் கொண்டிருக்க, கிறித்தவமும் இசுலாமியமும்
தமிழ் மண்ணில் காலூன்றிப் படைப்புகளைத் தந்த காலம்.
பதிப்புக்கலையும்     அச்சுக்     கலையும்     செழித்து,
செய்தித்தாட்கள், அகராதி, ஆய்வு நூல்கள் என்பன
தோன்றிய காலம். வீரமாமுனிவர் தொடங்கிய தமிழ்
உரைநடை மெல்ல நடைபயின்ற காலம். இராமலிங்க அடிகள்,
ஆறுமுக நாவலர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சுந்தரம்
பிள்ளை, மஸ்தான் சாகிபு, போப், கால்டுவெல் போன்று
பல்துறையிலும்     சான்றோர்     தோன்றிய     காலம்.
இச்சூழ்நிலையில் தமிழ் இலக்கியத்தின் நிலை பற்றி இந்தப்
பாடம் சொல்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமய
இலக்கியங்கள், தோத்திரப் பாக்கள், மொழிபெயர்ப்பு
நூல்கள், சோதிடம், ஆய்வு குறித்த நூல்கள் பற்றி
அறியலாம்.
இலக்கிய வரலாற்று நூல்கள், வரலாற்று ஆராய்ச்சி
நூல்கள், அகராதிகள் முதலியவை பற்றி அறியலாம்.
புதிய இலக்கிய வடிவங்களான நாவல், இசை நாடகங்கள்,
நாடகங்கள் பற்றித் தெரிந்து கொள்ளாம்.
தமிழிசை பெற்ற வளர்ச்சி, பதிப்பாசிரியர் பணிபற்றி
அறியலாம்.
கிறித்தவத்திலும் இசுலாமியத்திலும் தோன்றிய தமிழ்
இலக்கியப் படைப்புகளைப் பட்டியல் இடலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:39:07(இந்திய நேரம்)