தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-6:6-பாடத் தொகுப்புரை

6: 6 தொகுப்புரை

கற்பை ஆண் - பெண் இருவர்க்கும் பொதுவாக்கிக் 'கற்பு
நிலை' என்று பாடியிருப்பதும், 'புதுமைப் பெண்'ணைப்
படைத்திருப்பதும், 'பாஞ்சாலி சபதத்தைக் காப்பியப் பொருள்
ஆக்கியிருப்பதும், பெண்களின் கற்பை அழிப்பதற்கு முயலும்,
பெண்களுக்குப் பல வகையிலும் கொடுமைகள் செய்யும்
ஆண்களுக்கு எதிராக அழுத்தமாகவும் ஆவேசமாகவும் குரல்
கொடுத்திருப்பதும், 'பெண் விடுதலை'க்கான வழிமுறைகளைச்
சுட்டிக்காட்டி இருப்பதும், 'விதவா விவாகம் செய்யத்தக்கது' என்ற
முற்போக்கான எண்ணத்தைப் பதிவு செய்திருப்பதும் பாரதியார்
எப்போதும் பெண்களின் கட்சி பேசுகிற ஓர் ஆண்மை வீரர்
என்பதைப் பறைசாற்றி நிற்கின்றன.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.

பெண்ணுக்கு விடுதலை தருவதில் கவனிக்க வேண்டிய
முக்கியமான தொடக்கப் படிகளாகக் குறிப்பிடுவது
எதனை?

2.

தமிழ்நாட்டு மாதருக்குப் பாரதியார் விடுக்கும் செய்தி
யாது?

3.

பெண்கள் அறிவு வளர்த்தால் என்ன விளையும்
என்று பாரதியார் கூறுகிறார்?

4.

பெண் விடுதலைக்காக என்ன முறையைக்
கையாளுமாறு பாரதியார் அறிவுறுத்துகிறார்?

5.

துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்,
அநீதிகளுக்கெல்லாம் கோட்டை, கலியுகத்திற்குப்
பிறப்பிடம் என்று பாரதியார் எதனைக் கருதுகிறார்

6.

மிளகாய்ப் பழச் சாமியார் பாரதியாரிடம்
வலியுறுத்தியது யாது?

7.

'விதவா விவாகம் செய்யத்தக்கது என விசாலாட்சிக்கு
அறிவுரை கூறும் மாந்தரின் பெயர் என்ன?

8.

பெண்களுக்கு எதிராக ஆண்மக்கள் சுயநல
உணர்வோடு எழுதி வைத்திருப்பனவற்றைப்
பாரதியார் எங்ஙனம் சாடியுள்ளார்?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:04:37(இந்திய நேரம்)