Primary tabs
5. பாரதியார் தாம் இளமையில் அனுபவித்த
தனிமைத் துயரினைப்
பற்றி எங்ஙனம் பாடியுள்ளார்.
தமது இளமைக் கால ஏக்க உணர்வினைப்
பின்வருமாறு
பாரதியார் பாடியுள்ளார்
ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மரத்து ஏறி இறங்கியும்
என்னொடு ஒத்த சிறியர் இருப்பரால்
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான்
வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்
தூண்டு நூற் கணத்தோடு தனியனாய
தோழமை பிறிதின்றி வருந்தினேன்.