தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாட ஆசிரியரைப் பற்றி

பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன்


கல்வித்தகுதி

:

எம்.ஏ, எம்.பில், பிஎச்.டி.,

பணி

:

பேராசிரியர்
துறைத்தலைவர்
இலக்கியத்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்.

படைப்புகள்

:

தமிழ் இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும்
நூற்கள் பல படைத்துள்ளார்.
துண்டு (சிறுகதை)
கயற்கண்ணி (செய்யுள்நாடகம்)
வண்டார்குழலி (காப்பியம்)
சங்க இலக்கியத்தில் புறப்பொருள்

(ஆய்வு)

:

ஆய்வியல் நெறிகள்
நிலாக்கால நினைவுகள் (கவிதை)
இலக்கியநிழல் - (கட்டுரைத்தொகுப்பு)

:

சாம்பள்ஸ் கையடக்க அகராதியைத் தமிழாக்கம்
செய்துள்ளார்

சிறப்புகள்

:

இவர் எழுதிய துண்டு எனும் சிறுகதை
மலையாளம், குஜராத் ஆகிய மொழிகளில்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

முனைவர் இரெ. இராசபாண்டியன்


இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முகிலன் குடியிருப்பு என்னும் ஊரில் 04.05.1960
அன்று பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சு.இரெத்தினசாமி; தாயார் பெயர் இரெ.பத்மாவதி.

இவர் முகிலன் குடியிருப்பில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு வரை
படித்தார். கன்னியாகுமரிக்கு அருகில் அகத்தீசுவரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில்
புகுமுக வகுப்பும் பி.ஏ., வகுப்பும் படித்தார். திருநெல்வேலியில் உள்ள ம.தி.தா. இந்துக்
கல்லூரியில் எம்.ஏ., படித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்., பி.எட்.,
பட்டங்கள் பெற்றார். அங்குப் பயிலும் போதே மாலை நேரத்தில் பயின்று இதழியலில்
சான்றிதழ் பெற்றுள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம்
பெற்றார். மாலை நேரங்களில் இந்தி பயின்று தென்னிந்திய இந்தி பிரச்சார சபையில் ‘ராஷ்ட்ர
பாஷா’ சான்றிதழ் பெற்றுள்ளார்.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் 1997 முதல் தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணி புரிகின்றார். தற்போது
சென்னை, நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தமிழ் முதுநிலை விரிவுரையாளராகப்
பணியாற்றுகிறார்.

முகிலை இராசபாண்டியன் என்ற பெயரில் ஏழு நூல்கள் படைத்துள்ளார். தமிழ் வார மாத
இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.

இதுவரை 35 ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பாரதியார், பாரதிதாசன் அறக்கட்டளைப் பரிசுகளைப் பெற்றுள்ளார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:45:46(இந்திய நேரம்)