தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • பாடம் -4

    c01244 உலா இலக்கியம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    பாட்டுடைத் தலைவன் உலா வருதலைச் சிறப்பித்துப் பாடுகிறது. உலாவின் பொது இலக்கணம், அதன் தோற்றம், வளர்ச்சி ஆகியன இப்பாடத்தில் இடம்பெறுகின்றன.

    கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவர் உலா இப்பாடத்தில் விரிவாகப் பேசப்படுகிறது.

    ஒட்டக்கூத்தரின் சிறப்பும், பாட்டுடைத் தலைவன், பாட்டுடைத் தலைவனுடைய முன்னோர்கள் சிறப்பும் விரிவாகப் பேசப்படுகின்றன.

    பாட்டுடைத் தலைவன் உலாப்போகும் போது அவனைக் கண்ட மக்களின் மகிழ்ச்சியும், ஏழு பருவ மகளிர் (பேதை முதல் பேரிளம்பெண் வரை) காதல்கொண்ட நிலையும்  மிகச் சுவையாக விளக்கப்படுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்

    • தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்றாகிய உலா இலக்கியம் பற்றிய செய்திகளை அறிய முடியும்.

    • உலா இலக்கியம் பற்றிய இலக்கண வரையறைகளை அறிந்து கொள்ள முடியும்.

    • உலா பற்றிய அமைப்பு முறை, பாடுபொருள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

    • உலாவின் தோற்றம், வளர்ச்சி பற்றிய செய்திகளை அறிய முடியும்.

    • இராசராசசோழன் உலாவின் சிறப்புப் பாட்டுடைத் தலைவன் - இலக்கியச் சிறப்புகள் முதலியவற்றை விளக்க இயலும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:35:49(இந்திய நேரம்)