தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முனைவர் இரெ. இராசபாண்டியன்

இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முகிலன்குடியிருப்பு என்னும் ஊரில் 04.05.1960 அன்று பிறந்தார். இவரதுதந்தையார் பெயர் சு. இரெத்தினசாமி; தாயார் பெயர்இரெ. பத்மாவதி.

இவர் முகிலன் குடியிருப்பில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்பதினோராம் வகுப்பு வரை படித்தார்.கன்னியாகுமரிக்கு அருகில் அகத்தீசுவரத்தில் உள்ளவிவேகானந்தா கல்லூரியில் புகு முக வகுப்பும் பி.ஏ., வகுப்பும்படித்தார். திருநெல்வேலியில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரியில்எம்.ஏ., படித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்எம்.ஃபில்., பி.எட்., பட்டங்கள் பெற்றார். அங்குப் பயிலும்போதே மாலை நேரத்தில் பயின்று இதழியலில் சான்றிதழ்பெற்றுள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் ஆய்வு செய்துமுனைவர் பட்டம் பெற்றார். மாலை நேரங்களில் இந்திபயின்று தென்னிந்திய இந்தி பிரச்சார சபையில் ‘ராஷ்ட்ர பாஷா’சான்றிதழ் பெற்றுள்ளார்.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப்பணியாற்றிய இவர் 1997 முதல் தமிழ்நாடு அரசு கல்லூரிகளில்தமிழ் விரிவுரையாளராகப் பணி புரிகின்றார். தற்போது சென்னை,நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தமிழ் முதுநிலைவிரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

முகிலை இராசபாண்டியன் என்ற பெயரில் ஏழு நூல்கள்படைத்துள்ளார். தமிழ் வார மாத இதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார்.

இதுவரை 35 ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பாரதியார்,பாரதிதாசன் அறக்கட்டளைப் பரிசுகளைப் பெற்றுள்ளார்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:38:34(இந்திய நேரம்)