Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
1. தலைவனைக் காண விரும்பும் தலைவியின் நிலை எவ்வாறு உள்ளது?
வறுமையின் காரணமாகச் செல்வந்தனை நாடிச் செல்லும் வறியவர், கதவு அடைக்கப்பட்டிருப்பதைக்கண்டு, தட்டித் திறப்பதற்குத் தைரியம் இல்லாமலும், திரும்பிப் போவதற்குத் துணிவு இல்லாமலும் இருக்கும் நிலைபோல் உள்ளது.
