தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5. புறநூனூறு காட்டும் பண்பாட்டு நிகழ்வுகளில் இரண்டைக் குறிப்பிடுக.

    பிசிராந்தையார் என்ற புலவர் பாண்டி நாட்டில் பிசிர் என்ற ஊரில் இருந்தவர். கோப்பெருஞ் சோழன் சோழ நாட்டில் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இருவரும் ஒருவரை ஒருவர் காணாமலேயே நட்புக் கொண்டனர். கோப்பெருஞ் சோழன் தன் பிள்ளைகளிடம் மனவேறுபாடு கொண்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டான். உயிர்விடுமுன் அவன் ஆந்தையார் தன்னைப் பார்க்கவரின் தனக்குப் பக்கத்தில் அவருக்கு இடம் அளிக்குமாறு கூறிவிட்டு உயிர் நீத்தான். சோழன் இறந்த பிறகு ஆந்தையார் வந்தார்; மனம் வருந்தினார்; அங்கேயே உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார்.

    குமணன் என்ற அரசன் புலவருக்கு ஒன்றும் கொடுக்க முடியாத நிலையில் இருந்தபோது தன் தலையைக் கொண்டு போய்க் கொடுத்தால் அவன் தம்பி இளங்குமணன் அதற்காகப் பரிசில் தருவான் என்பதறிந்து புலவருக்குத் தன் தலையைக் கொடுக்க இசைந்தான். இவையெல்லாம் புறநானூறு காட்டும் பண்பாட்டு நிகழ்வுகள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:40:01(இந்திய நேரம்)