தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.4 தொகுப்புரை

  • 1.4 தொகுப்புரை

    மாணவர்களே! இப்பாடத்தில் நீங்கள் பத்துப்பாட்டுப் பற்றிய அறிமுகச் செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள். இதில் ஐந்து ஆற்றுப்படை நூல்களும், நான்கு அக நூல்களும் ஒரு புற நூலும் இடம் பெற்றுள்ளன. இவை 3552 அடிகளைக் கொண்டவை. மேலும், ஆற்றுப்படை நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை பற்றிய தெளிவும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். சிறுபாணாற்றுப்படை பற்றிய எஞ்சிய பாடங்களில் இந்நூல் கூறும் செய்திகளை வகைப்படுத்திப் படிக்க இருக்கிறீர்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார்?

    2.

    சிறுபாணன் - விளக்கம் தருக.

    3.

    சிறுபாணாற்றுப் படை எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது?

    4.

    நல்லியக்கோடன் ஆட்சி செய்த நாடு எது?

    5.

    நல்லியக்கோடனின் தலைநகரம் எது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 18:54:22(இந்திய நேரம்)