Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
இவ்வுலகில் அறிஞர்கள்பலர்உள்ளனர். அவர்கள்ஞாயிற்றின்
இயக்கம், அவ்வியக்கத்தாற் பொலியும்
பார்வட்டம்,
காற்றியங்கும் திசைகளின் பரிமாணம், ஒன்றாலும்
தாங்கப்படாமல் நிற்கும் ஆகாயம், ஆகிய இவற்றின
நுணுக்கங்களை அங்கங்கே சென்று அறிந்தோர்போலத்
துல்லியமாகக் கணக்கிட வல்லவர்கள். அவர்களாலும்
அளத்தற்கரிய பேராற்றல் படைத்தவள் நலங்கிள்ளியென்று
புலவர் இப்பாட்டிற் கூறுகின்றார்.