தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A06131

பாடம் - 5

D01145 பதிற்றுப்பத்து - 1

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்துக்குரிய பாட்டுடைத் தலைவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன். அவனைப் பரணர் பாடியுள்ளவை இப்பத்துப் பாடல்கள். இவற்றின் கருத்துகளையும், இவற்றில் உள்ள செங்குட்டுவனைப் பற்றிய செய்திகளையும் இப்பாடம் அளிக்கின்றது.

செங்குட்டுவனின் வெற்றிகள், வரம்பற்ற கொடை, கலைகளைப் போற்றும் உள்ளம் ஆகியவற்றை இப்பாடத்தில் அறிந்து கொள்ளலாம்.

பதிற்றுப்பத்து என்னும் சேரர் இலக்கியம் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்ற நான்கைப் பெற்றிருக்கிறது. இதில் புறநானூற்றோடு வேறுபடுவதை இப்பாடத்தின் வழியறியலாம்.


இந்தப் பாடத்தைப்படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

சேரர் இலக்கியமாகிய பதிற்றுப்பத்தின் சிறப்பை அறியலாம்.

செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுத்தவன் என்பதைப் பதிகத்தின் வழி அறியலாம்.

செங்குட்டுவன் தன் நண்பன் அறுகைக்காக மோகூர்ப் பழையனை வென்ற வரலாற்றை அறியலாம்.

சங்கத் தமிழ் நடை குறிப்பாகப் பதிற்றுப்பத்தின் நடையில் ஒரு பயிற்சி பெறலாம்.

சங்ககால அருஞ்சொற்கள் பலவற்றுக்குப் பொருள் அறியலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:43:07(இந்திய நேரம்)