Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-I1.பாங்கி மதி உடன்பாட்டின் மூன்று நிலைகள் யாவை?
தோழி மதியோடு (அறிவோடு) உடன்படுத்தி ஆராய்ந்து முடிவு காண்பது பாங்கிமதி உடன்பாடு எனப்படும். இது மூன்று நிலைகளை உடையது. அவையாவன: (1) முன்னுற உணர்தல் (2) குறையுற உணர்தல் (3) இருவரும் உள்வழி அவன் வர உணர்தல்.