Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-I3.பாங்கியிற் கூட்டம் என்றால் என்ன?
பாங்கி (தோழி) வழியாகத் தலைவன் தலைவியைச் சேர்வது. பாங்கியிற் கூட்டம் எனப்படும். தோழி தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள களவு வழிப்பட்ட காதல் ஒழுக்கத்தை முன்னுற உணர்தல், குறையுற உணர்தல், இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் என்னும் மூவகையில் ஏதேனும் ஒன்றாலோ பலவற்றாலோ உணர்ந்து தெளிவாள். பின் தலைவனது வேண்டுகோளை ஏற்று, தலைவியுடன் அவன் களவு ஒழுக்கத்தைத் தொடர்ந்திட வழிவகை காண்பாள். இதுவே பாங்கியிற் கூட்டம் எனப்படும்.