Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II4.அல்லகுறி எனப்படும் இரவுக்குறி இடையீட்டை விளக்குக.
இரவுக்குறியில் சந்திக்க வரும் தலைவன் தன் வருகையை அறிவிக்கச் சில செயல்பாடுகளை நிகழ்த்துவான். அவை அடையாளக் குறியீடுகள் ஆகும். பறவை போல ஒலி எழுப்புதல், தண்ணீரில் கல் எறிதல், இளநீரைப் பறித்துப் போடுதல் போன்ற செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை நிகழ்த்தி, தலைவன் தன் வருகையை உறுதி செய்வான். அதை உணர்ந்து தலைவியும் குறியிடத்திற்குச் சென்று கூடுவாள். சிலசமயம் மேற்சொன்ன அடையாளச் செயல்பாடுகள் வேறு காரணத்தினால் அல்லது வேறு ஒன்றினால் அல்லது இயல்பாக நிகழ்ந்துதிடுவது உண்டு. ஆனால் தலைவியோ அது தலைவன் நிகழ்த்திய அடையாளமே எனக் கருதிக் குறியிடத்திற்குச் சென்று தலைவனைக் காணாது திரும்பி விடுவாள். தலைவனும் அவ்வாறே வந்து தலைவியைக் காணாது, காரணமும் புரியாது திரும்பி விடுவான். இதுவே அல்ல குறிப்படுதல் எனப்படும்.