Primary tabs
நம்பியகப் பொருளின் இறுதி இயல் ஒழிபியல் ஆகும். அவ்வியலில் இடம் பெற்ற இலக்கணச் செய்திகளின் ஒரு பகுதியை நான்காம் பாடத்தில் கற்று உணர்ந்தோம். எஞ்சிய ஒழிபியல் செய்திகளை விளக்குவதாக இப்பாடம் அமைகிறது.
உவமை, இறைச்சி என அகப்பாட்டினுள் இடம் பெறும் இரண்டு வகைப் பொருள்களைப் பற்றிப் பேசுகிறது.
அகப்புறக் கைக்கிளை, அகப்பொருட் பெருந்திணை, அகப்புறப் பெருந்திணை ஆகியவற்றை விளக்குகிறது.
அகப்பாட்டினுள் இடம்பெறும் இருவகைத் தலைவர்கள் பற்றிச் சொல்கிறது.
முதல், கரு, உரி எனும் முப்பொருள்களின் வழு அமைதியைக் கூறுகிறது.
இப்பாடத்தைக் கற்பதால் கீழ்க்காணும் பயன்களைப் பெறலாம்:
உவமையின் இரு கூறுகளைக் கற்றுணரலாம்.
இறைச்சிப் பொருளின் இலக்கணத்தை
அறியலாம்.
அகப்புறக் கைக்கிளைக்கான வரையறையும்,
அதற்கு
உரியோர் யாவர் என்பதையும்
அறியலாம்.
பெருந்திணையின் இரு
பிரிவுகளான அகப்பொருட்
பெருந்திணை, அகப்புறப் பெருந்திணை என்னும்
இரண்டின்
இலக்கணத்தைக் கற்றுணரலாம்.
அகப்பாட்டினுள் பாடப்படும்
தலைமக்கள் பற்றிய
விளக்கங்களை அறியலாம்.
முதல், கரு, உரி என்னும் முப்பொருளும்
மயங்குதல் பற்றிய
வழு அமைதியை அறியலாம்.