தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அசையும் சீரும்

  • பாடம் - 3

    D03113 அசையும் சீரும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    அசை, செய்யுளின் உறுப்புகள் ஆறனுள் இன்றியமையாத உறுப்பு என்று சொல்கின்றது. ஒலிநடையை உண்டாக்குவதில் அசையின் பங்கு பெரிது என்கிறது. செய்யுளுக்கு அலகிடும் முறையை அறிவிக்கின்றது. அசையின் எண்ணிக்கையைக் கொண்டே, சீர்கள் பெயரிடப்படுகின்றன; சீர்களே, பண்ணொடு பொருந்திய பாடலின் ஓசையைத் தீர்மானிக்கின்றன என்பதை அறிவிக்கின்றது. எளிமையாக ஒலிக்கப்படுவதற்காக அமைக்கப் பெற்றனவே வாய்பாடுகள் என்று குறிப்பிடுகின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • அசை, சீர் என்பவற்றின் பெயர்க் காரணங்களை அறியலாம்.

    • அசை அமையும் வகை; அசையின் வகை; சீரின் வகை, சீர்கள் பெறும் பலவகைப் பெயர்கள், பெயர்கள் அவ்வாறு வழங்கப்படுவதற்கான காரணங்கள் போன்றவற்றைப் பற்றி அறியலாம்.

    • அலகும் அலகிடும் முறையையும் அறிவதால், பாக்கள் இன்ன வகையின எனப் பிரித்தறியும் பயனை எய்தலாம்.

    • மெய்யெழுத்தின் மாத்திரையளவைக் கண்டு, அதனை அலகிடுங்கால் கணக்கில் கொள்ளாவிட்டாலும், அது, அசையெல்லையாகக் கொள்ளப் பெறுவதை அறியலாம். அறிந்து, ‘ஒன்றில் சிறியர் ஒன்றில் பெரியர்’ என வோர்ந்து வாழ்வை இன்னிதின் நடத்தலாம்; தன்னம்பிக்கை கொள்ளலாம்.

    • ‘வாய்பாடு’களைக் கொண்டு அமைத்துத் தந்த முன்னோர்களின் உதவி செய்யும் தன்மையை உணரலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 15:26:51(இந்திய நேரம்)