தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விளிவேற்றுமை

  • 2.6 விளிவேற்றுமை

    இவ் வேற்றுமைக்கென்று தனி ஒரு வேற்றுமை உருபு ஏதும் கிடையாது. பெயர்ச்சொற்களின் ஈறு அடையும் திரிபினால் இது உணர்த்தப்படுகிறது. 'அழைத்தல்' என்பது இவ்வேற்றுமையின் பொருள். இதற்கு அமைந்த 'விளி'யென்னும் பெயராலேயே இன்றுவரை அழைக்கப்படுகிறது.

         அவைதாம்
         பெயர் ஐ ஒடு கு
         இன் அது கண் விளி யென்னும் ஈற்ற
                                  (தொல்.சொல். 64)

    இதற்கு 'எட்டாம் வேற்றுமை' என்ற பெயரும் உண்டு. விளி வேற்றுமைக்கும் பிற வேற்றுமைக்கும் வேறுபாடு உண்டு. பிற வேற்றுமைகள் சொற்றொடரில் காணப்படும் பொருள்தொடர்பைக் காட்டுவன. ஆனால் விளி வேற்றுமைக்கும் வினைச்சொல்லுக்கும் எந்தவிதமான பொருள் தொடர்பும் கிடையாது. விளிவேற்றுமை சொற்றொடரின் அக உறுப்பாக இல்லாமல் புற உறுப்பாகவே உள்ளது. கண்ணா ! நீ எங்கே போகிறாய்? என்பதில் ‘நீ எங்கே போகிறாய்?’ என்பதே வாக்கியம். நீ- எழுவாய். எங்கே போகிறாய்?- பயனிலைத்தொடர். கண்ணா என்று ‘விளி’ வாக்கியத்திற்கு வெளியே உள்ளது.

    • சங்ககாலம்

    சான்று:

        'தோழீ இ         (அகநானூறு.352:1)

    • இடைக்காலம்

    இடைக்காலத்தில் இது எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் முன்பு இருந்ததுபோலவே வழங்கப்பட்டு வந்தது.

    சான்று:

        கோத்தும்பீ (திருவாசகம், திருக்கோத்தும்பி.10:10)

        'காள்' என்னும் சொல்லும் விளியைக் குறிக்கப் பயன்பட்டது.

    சான்று:

        மாமுகில்காள்
         (நாச்சியார் திருமொழி,மேகவிடுதூது.2)

    • தற்காலம்

    சான்று:

    'கண்ணா!'

    இவ்வாறாக விளி வேற்றுமை யாதொரு வேற்றுமை உருபையும் ஏற்காது அழைத்தலில் வருகிறது. அதே சமயத்தில் பெயர்ச் சொல்லில் ஒரு சில எழுத்து மாற்றங்களுடன் வருவதுண்டு.

    வேற்றுமைகளின் வளர்ச்சி அட்டவணை

    வ. எண்
    வேற்றுமை
    சங்ககால
    வேற்றுமை
    உருபுகள்
    இடைக்கால
    வேற்றுமை
    உருபுகள்
    தற்கால
    வேற்றுமை
    உருபுகள்
    1
    எழுவாய்
    வேற்றுமை
    (Nominative Case)
    2
    இரண்டாம்
    வேற்றுமை
    ஐ (அ)
    ஐ (Accusative Case)
    3
    மூன்றாம் வேற்றுமை
    ஒடு ஓடு,
    ஆன்
    ஒடு ~ ஓடு,
    ஆன் ~ ஆல்,
    கொண்டு,
    உடன்
    ஒடு ~ ஓடு
    (Associative Case) ஆல் (Instrumental Case)
    4
    நான்காம்
    வேற்றுமை
    கு
    கு, பொருட்டு
    -க்கு, -உக்கு,
    -கு (Dative Case)
    5
    ஐந்தாம்
    வேற்றுமை
    இன்
    இன் ~ இல்,
    நின்று
    இருந்து,
    (இல்+இருந்து
    - அஃறிணை)
    (இடம் +
    இருந்து -
    உயர்திணை)
    (Ablative Case)
    6
    ஆறாம்
    வேற்றுமை
    அது, அ, கு
    அது ~ ஆது,
    உடைய
    அது, உடைய,
    இன் (Genitive Case)
    7
    ஏழாம்
    வேற்றுமை
    கண், இடம்,
    இல், உள்
    கண், கால்,
    இடம், இல்,
    உள்
    இல், இடம்
    (Locative Case)
    8
    விளி
    வேற்றுமை
    ஒலியன்
    மாற்றம்
    ஒலியன் மாற்றம்
    ஒலியன் மாற்றம்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-11-2017 16:36:51(இந்திய நேரம்)