தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.7 தொகுப்புரை

    • தமிழ்ச் சிறுகதைகளின் மூலவர்களாக மாதவையா, பாரதி, வ.வே.சு.ஐயர் இவர்களைக் குறிப்பிடலாம்.

    • சிறுகதை வரலாற்றில் மணிக்கொடி இதழ் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

    • புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் இருவரும் சிறுகதை மன்னர்கள் என்று சுட்டப்படும் அளவிற்குத் தரமான நல்ல கதைகள் படைத்துள்ளனர்.

    • சிறுகதை     வளர்ச்சியில்     இதழ்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

    • தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் பெண் எழுத்தாளர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

    • தமிழ்நாட்டிற்கு வெளியேயும் தமிழ்ச் சிறுகதை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.

    • இணைய இதழ்கள் மூலம் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கமமாகும் சூழல் ஏற்பட்டு வருகின்றது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    சிறுகதை இலக்கியத்திற்குச் ‘சிவிகை’யாக விளங்கிய இதழ் எது?
    2.
    சிறுகதைகளைப் படைத்து வரும் தலித் பெண் எழுத்தாளர்கள் இருவரைக் குறிப்பிடுக.
    3.
    தமிழில் முதல் சிறுகதைப் போட்டியை எந்தப் பத்திரிகை எந்த ஆண்டு நடத்தியது?
    4.
    சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் அமைப்புகள் இரண்டின் பெயரினைக் கூறுக.
    5.
    இலங்கைச் சிறுகதை எழுத்தாளர்களில் முதன்மையானவர் யார்?
    6.
    மலேசியாவில் சிறுகதை வளர்க்கும் இரு இதழ்களின் பெயரினைக் கூறுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 15:01:23(இந்திய நேரம்)