தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

 • 6.6 தொகுப்புரை


       இனிய நண்பர்களே, இதுவரை தமிழின் குறும்பா என்னும் கவிதை வகை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்று நினைவு படுத்திப் பாருங்கள் :

  • குறும்பா என்பது என்ன என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
  • குறும்பா என்னும் புதுவகைத் தமிழ்க் கவிதை தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிய முடிந்தது.
  • குறும்பாக்களைச் சிறப்பாகப் படைத்த மஹாகவி, மீரா, ஈரோடு தமிழன்பன் ஆகிய கவிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.
  • அவர்களின் படைப்பு ஆக்கத் திறன்கள் பற்றியும், அவர்களின் தனித்தன்மை பற்றியும் அவர்களின் குறும்பாக்கள் சில கொண்டு புரிந்து கொள்ள முடிந்தது.
  • நல்ல குறும்பாக்களைச் சுவைத்து மகிழ முடிந்தது.

  தன்மதிப்பீடு : வினாக்கள் - II

  1)

  மீராவின் குறும்பா நூல்களின் பெயர்கள் கூறுக.

  2)
  கூடல் நகரில் கூட்டம் பற்றிய ‘குக்கூ’ குறும்பா என்ன கவிதை வகையில் அமைந்தது? எப்படி?
  3)
  லிமரைக்கூ - இது எந்த இருவகைக் கவிதைகளின் கலப்பு இனம்?
  4)
  துபாயில் இருந்து திரும்பியவன் குடும்பத்தின் பாசம் எதில் இருக்கிறது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 11:44:09(இந்திய நேரம்)