Primary tabs
பாடம் - 1
P10331 சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்
தமிழ் மொழியில் காணப்படும் இலக்கிய வகைமைகளில் ஒன்று சிற்றிலக்கியம்.
சிற்றிலக்கியம் என்பதன் விளக்கம், சிற்றிலக்கியத்திற்கும் பேரிலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடுகள், சிற்றிலக்கியம் என்ற சொல் தோன்றிய வரலாறு, சிற்றிலக்கிய எண்ணிக்கை, சிற்றிலக்கிய வகைகள், சிற்றிலக்கியத்தின் தோற்றத்திற்கான காரணங்கள், சிற்றிலக்கியத்தின் சிறப்புகள் என்பன இப்பாடத்தில் விரிவாக விளக்கிக் கூறப்படுகின்றன.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம் என்ற பாடத்தின் கற்றல் செயல்களில் ஈடுபட்டு, இப்பாடத்தைப் படித்து முடித்த பின்னர், பின்வரும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
-
தமிழ் இலக்கிய வகைமைகளில் ஒன்றாகிய சிற்றிலக்கியம் என்பதன் விளக்கத்தை அறிந்து கொள்வீர்கள்.
-
சிற்றிலக்கியத்திற்கும் பேரிலக்கியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறியலாம்.
-
சிற்றிலக்கியம் என்ற சொல் எவ்வாறு தோன்றியது என்பது தெரியவரும்.
-
தமிழ்மொழியில் காணப்படும் சிற்றிலக்கியங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம் என்பது தெளிவாகும்.
-
சிற்றிலக்கிய வகைகள் பல தோன்றுவதற்குரிய காரணங்களை அறியலாம்.
-
சிற்றிலக்கியத்தின் சிறப்புகளை இனம் காணலாம்.
-