Primary tabs
2.0 பாட முன்னுரை
முந்தைய பாடத்தில் நாம் சிற்றிலக்கியம் என்பது பற்றியும், சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை பற்றியும் சிற்றிலக்கியங்களை எவ்வாறெல்லாம் வகைப்படுத்தலாம் என்பது பற்றியும் பார்த்தோம். இந்தப் பாடத்தில் சிற்றிலக்கிய வகைகளில் சிறப்பிடம் பெறுகின்ற குறவஞ்சி, தூது, மடல், உலா, பள்ளு, கலம்பகம் ஆகிய இலக்கிய வகைகளைப் பற்றிய பொதுவான செய்திகளைக் காண்போம்.