தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 3-P10333

பாடம் - 3

தமிழ்விடு தூது

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ் மொழியில் உள்ள சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று தூது இலக்கியம் என்பதையும், தூது இலக்கியத்தில் இடம் பெறும் நூல்களில் ஒன்று தமிழ்விடு தூது ஆகும் என்பதையும் இப்பாடம் எடுத்துக் கூறுகிறது.

தமிழ்விடு தூது பற்றிய குறிப்புகளையும், தமிழ்விடு தூது நூலின் அமைப்பையும் இந்தப் பாடம் சுருக்கமாகக் கூறுகின்றது.

தமிழ்விடு தூது நூல் தமிழ் மொழியின் பெருமைகள், சோமசுந்தரக் கடவுளின் பெருமைகள், தூது அனுப்பும் தலைவி தமிழ் மொழியைத் தூது விடுவதன் காரணங்கள், பிற பொருட்களைத் தூது அனுப்பாததன் காரணங்கள், தூதுப்பொருள் செய்ய வேண்டுவன, செய்யக்கூடாதன, தலைவியின் தூதுச் செய்தி முதலிய செய்திகளை விரிவாக விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தினைப் படித்து முடிக்கும் பொழுது நீங்கள் பின்வரும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  • தூது இலக்கியத்தில் ஒன்றான தமிழ்விடு தூது நூல் பற்றி அறியலாம்.
  • தமிழ்விடு தூது நூலின் அமைப்பைப் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.
  • தமிழ்மொழியின் பெருமைகளை அறியலாம்.
  • சோமசுந்தரக் கடவுளின் பெருமைகளில் சிலவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
  • தலைவி பிற பொருட்களைத் தூது அனுப்பாததன் காரணங்களை விளங்கிக் கொள்ளலாம்.
  • தலைவி தமிழ்மொழியிடம் தூது சொல்லும் முறை பற்றிக் கூறுவதை அறியலாம். தலைவியின் தூதுச் செய்தி தெரியவரும்.

பாட அமைப்பு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-08-2018 14:54:00(இந்திய நேரம்)