தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    5.

    சிறந்த மொழிபெயர்ப்பு என்பது என்ன?

    எந்த ஒருமொழிபெயர்ப்பும் மூலத்தின் கருத்தினைத் தவறில்லாமல் பெறுமொழி வாசகனுக்குப் பெயர்த்துத் தருவதாக அமைய வேண்டும். மொழிபெயர்ப்பின் இப்பணியைத் தகவல் தரும் பணி (Informative function) என்பர்.

    மூலத்தின் கருத்து மூலமொழி வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வுகளை மொழிபெயர்ப்பும் தன் வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ற புலப்பாடுகளை (Expressions) மொழிபெயர்ப்பு பெற்றிருத்தல் வேண்டும். இதனை மொழிபெயர்ப்பின் உணர்வூட்டும் பணி (Expression function) என்பர்.

    வாசகரைச் செயல்படத் தூண்டுவதாகவும் மொழிபெயர்ப்பு அமைதல் வேண்டும். அதற்கான ஆற்றல் அதற்கு இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பின் இச்செயல்பாட்டைச் செயல்தூண்டும் பணி (Imperative function) என்பர். மேற்கண்ட மூன்று பணிகளும் ஒரு மொழிபெயர்ப்பில் இருந்தால் அம்மொழிபெயர்ப்பு கூடுதல் ஆற்றல் வாய்ந்ததாக - சிறந்ததாக - இருக்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 12:05:16(இந்திய நேரம்)