Primary tabs
-
1.6 தொகுப்புரை
தமிழ் மக்களின் வழிபடு கடவுளாகத் திருமால் தோற்றம் பெற்ற
பாங்கையும், திருமால் அவதாரங்கள் பற்றிய செய்திகளையும்
இலக்கியச் சான்று வழி அறிந்து கொண்டிருப்பீர்கள்.இராமாயண, பாரதக் கதைக் குறிப்புகள் பற்றியும் அந்தக்
குறிப்புகளின் வழி , பக்தி இலக்கிய உலகுக்கு விதை
தூவப்பட்டிருப்பதையும் உணர்ந்து தெளிந்திருப்பீர்கள்.
சிலப்பதிகாரம் பக்தி இயக்கத்துக்கு வித்திட்டிருப்பதையும்
அறிந்திருப்பீர்கள்.தனித் தனிப்பாடல்களும், தொடர்நிலைச் செய்யுள்களாக
அமைந்த காப்பியங்களும், மணிமேகலை போன்ற பௌத்த
சமயக் காப்பியமும் திருமால் தொடர்பான செய்திகளைப்
பதிவு செய்துள்ளதை அடையாளங் கண்டிருப்பீர்கள்.
பயில்முறைப் பயிற்சிதிருமாலின் அவதாரங்கள் பலவற்றை நீங்கள் படித்தீர்கள். மீண்டும் ஒரு முறை அவற்றை வரிசையாக நினைவுபடுத்திப் பாருங்கள். அதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வது என்ன? யோசித்துப் பாருங்கள்!