தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20225mn.htm-[Back]

E
P20225 - நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
  • நம்மாழ்வார் இறைவனாலேயே நம் ஆழ்வார் என்று
    அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். இவர் அருளிய
    பாசுரங்கள் வேதத்தின் சாரம் எனப் புகழப்பட்டது.
    வேதம் செய்த மாறன் என்ற பெயரும் இவருக்கு
    ஏற்பட்டது. இவர் பாடிய பாசுரங்களின் பெருமை
    இப்பாடத்தில் பேசப்படுகிறது.

     

  • மதுரகவியாழ்வார், நம்மாழ்வாரையே தெய்வமாக எண்ணிப்
    போற்றியவர். அவரைத்தவிர வேறு தெய்வமில்லையென,
    திருமாலைப்     பாடாமல் திருமால் அடியவராகிய
    நம்மாழ்வாரைப் பாடி பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக
    எண்ணிப் போற்றப்பட்டவர்.

     

  • திருமங்கையாழ்வார் பாடிய ஆறு நூல்களைப் பற்றி
    விரிவாகப் பேசுகிறது இப்பாடம். சிறிய திருமடல். பெரிய
    திருமடல் என எழுதி மடல் இலக்கியத்திற்கு
    முன்னோடியாக அமைந்த பெருமைக்கு உரியவர்
    திருமங்கையாழ்வார்.

இவையனைத்தும் இப்பாடத்தில் விளக்கமாகப் பேசப்படுகின்றன.

 



இப்பாடத்தைப் படிப்பதால்என்ன பயன் பெறலாம்?

  • நம்மாழ்வார் அருளிய திவ்வியப் பிரபந்தங்களின் சிறப்பை
    உணர்ந்து கொள்ளலாம்.

  • மாறனின் பக்தி, தமிழை வளப்படுத்திய பாங்கு
    ஆகியவற்றைத் திருவாய்மொழிவழி     அடையாளங்
    காணலாம்.

  • நம்மாழ்வாரைக் குருவாக ஏற்று அவரை மட்டும்பாடி
    அடியார்க்கு அடியார் ஆன சீடன் மதுரகவியின்
    பக்தியை இனங் காணலாம்.

  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் நம்மாழ்வார் அருளிய
    திருவாய்மொழிக்குரிய சிறப்பை மற்றப் பகுதிகளுடன்
    ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

  • திருமங்கை அருளிய பிரபந்தங்களில் உள்ள இலக்கிய
    வகைகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.

  • நாயக நாயகி பாவத்தில் தோய்ந்த திருமங்கை நாயகியின்
    புலப்பாட்டு உத்தியையும், கவிபாடும் திறனையும்
    உணர்ந்து, பக்தி இலக்கியத்தின் தனித்தன்மையை
    அடையாளம் காணலாம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:40:03(இந்திய நேரம்)