Primary tabs
-
6.0 பாட முன்னுரை
செய்தித்தாளின் தொழில் நுட்பத் துறையாக இயந்திரப் பிரிவு செயல்படுகின்றது. அச்சுக்கோப்பு, அச்சுப்பதிவு, அச்சுப்படிகள் தயாரிப்பு, அச்சுப்படி திருத்தம் ஆகிய பணிக் இப்பிரிவில் நடைபெறுகின்றன. தலைமை அச்சுப்பணி மேற்பார்வையாளர் ஒருவர் இப்பணிகளை மேற்பார்வையிடுவார். இப்பிரிவில் மனிதர்கள் இயந்திரங்களுடன் சேர்ந்து வேகமாகச் செய்தித்தாள்களை உருவாக்குகின்றனர். இதிலுள்ள நான்கு பிரிவுகளில் பணியாற்றுகின்றவர்களின் கூட்டு முயற்சியில்தான் தரமான இதழ்கள் உருவாகின்றன. ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதிகளுடைய பணிகளையும் முறைகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
பொதுவாக ஒரு செய்தித்தாளின் அலுவலகம் நிருவாகப் பிரிவு (Administrative Section), ஆசிரியர் குழு (Editorial Section), வணிகப் பகுதி (Business Section), இயந்திரப் பிரிவு (Mechanical Section) என்று நான்கு பகுதிகளாகப் பகுக்கப்படும். இவற்றுள் இயந்திரப் பிரிவு மட்டும் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றது.