Primary tabs
கட்டுமானக் கோயில்கள் என்பவை கற்களை அடுக்கி
வைத்துக் கட்டப்படும்
கோயில்களாகும். பல்லவ
மரபில் முதன் முதலாகக் கட்டுமானக் கோயில்களையும் அவற்றில்
கற்சிற்பங்களையும்
உருவாக்கியவன் இராச
சிம்மன். (கி.பி. 700 -
728) இவனது படைப்புகளில் புகழ் பெற்றவையாக விளங்குவன
மகாபலிபுரம் கடற்கரைக் கோயிலும், காஞ்சி கைலாச நாதர்
கோயிலும் ஆகும்.
மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில் மூன்று
கோயில்களின் தொகுப்பு ஆகும். இதில் கிழக்கு நோக்கியுள்ள
கோயில் கருவறையின் பின் சுவரில் சோமாஸ்கந்தர் புடைப்புச்
சிற்பமும், கருவறையின் நடுவில் சிவ லிங்கமும் காணப்படுகின்றன.
இதன் விமானத்தில் பூத கணங்கள் காணப்படுகின்றன. இந்தக்
கோயிலின் பெயர் சத்திரிய
சிம்மப் பல்லவேசுவரக் கிருஹம்
என்பதாகும்.
கடற்கரைக் கோயில், மகாபலிபுரம்
மேற்கு நோக்கிய கோயில் கருவறையின் பின் சுவரில்
சோமாஸ்கந்தர் புடைப்புருவம் மட்டும் இடம் பெறுகிறது.
இக்கோயிலின் பெயர் இராச சிம்மப் பல்லவேசுவரக் கிருஹம்
என்பதாகும்.
கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிய கோயில்களுக்கு இடையே
உள்ள
கோயில் நரபதி சிம்ம பல்லவ விஷ்ணுக் கிருஹம்
எனப்படும். இதன் கருவறையில் திருமால்
பள்ளி கொண்ட
பெருமாளாகக் காட்சி தருகிறார்.
கடற்கரைக் கோயிலும் அதன் கண் உள்ள சிற்பங்களும்தாம்
தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல் கட்டுமானக் கோயிலும்,
தனி்ச் சிற்பங்களும் ஆகும்.
இராச சிம்மேசுவரம் என அழைக்கப்படும் காஞ்சி கைலாச
நாதர் கோயில் கட்டுமானக் கோயிலுக்குச் சிறந்த எடுத்துக்
காட்டாக விளங்குகின்றது. நான்கு தளங்களைக் கொண்டு
விளங்கும் இந்த விமானத்தின் கீழ்த்தளத்தின் சுவர்களில் ஏழு
சிறு சன்னதிகளும் அவைகளினுள்ளே இறையுருவங்களும்
அமைக்கப்பட்டுள்ளன. கருவறை அதிட்டானத்தில் (விமானத்தின்
அடித்தளம்) அமைந்துள்ள கண்டப் பகுதியில் (விமானத்தின்
கழுத்துப்பகுதி) சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை கலபாதச்
சிற்பங்கள் என அழைக்கப்படும்.
காஞ்சி - கைலாச நாதர் கோயில்
விமான கிரீவத்தில் உள்ள கோட்டங்களில் கிழக்கே, சிவனும்
தெற்கே தட்சிணாமூர்த்தியும், மேற்கே திருமாலும், வடக்கே
பிரம்மாவும் வைக்கப்பட்டுள்ளனர். இக்கோயில்
கருவறையின்
பின்சுவரில் சோமாஸ்கந்தர் புடைப்புருவமும் கருவறையின் நடுவில்
சிவலிங்கமும்
உள்ளன.
(விமான கிரீவம் : விமானக் கூரையில் உள்ள தளத்தில்
ஒவ்வொரு திசைக்கும்
ஓர் இறையுருவம் இடம் பெறுகிற பகுதி)
நந்தி வர்ம பல்லவன் எனப் புகழ் பெற்ற இரண்டாம் நந்தி
வர்மனால் (கி.பி. 730 - 795) கட்டப்பட்ட மிகச் சிறப்பான
கட்டுமானக் கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள பரமேசுவர விஷ்ணுக் கிரஹம் என்றழைக்கப்படும் வைகுந்தப் பெருமாள் கோயிலாகும். இது தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் அஷ்டாங்க விமானக் கோயிலாகும்.
வைகுந்தப் பெருமாள் கோயில்
அஷ்டாங்க விமானம் என்பது மூன்று கருவறைகளை
ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதாகும். இம்மூன்றிலும்
திருமாலுடைய நின்ற, இருந்த, கிடந்த கோலச் சிற்பங்கள்
இடம்
பெறும்.
வைகுந்தப் பெருமாள் கோயிலில் நான்கு கருவறைகளை
உடைய விமானம் அமைந்துள்ளது. இதில் கீழிருந்து மலோக
முறையே நின்ற, அமர்ந்த, கிடந்த கோலங்களில் திருமாலின்
உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. நான்காவது கருவறை இறையுரு
இன்றி உள்ளது. கருவறையைச்
சுற்றியுள்ள சுவரின் உட்பகுதியில்
உள்ள புடைப்புச் சிற்பங்கள் பல்லவரது வரலாற்றை
விளக்கும்
சிற்பங்களாகும்.