Primary tabs
பல்லவர்கள் தமிழகக் கலை வரலாற்றின் தொடக்கக்
காலத்தவராக இருப்பினும் தமக்கென்றே ஒரு தனி
மரபைத்
தோற்றுவித்துச் சென்றுள்ளனர். தமிழகத்தில் பல்லவர்களுக்கு
அடுத்தடுத்துத் தோன்றிய
அரச மரபினர், பல்லவரது கோயில்
கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றில் சிற்சில மாற்றங்கள்
செய்து தத்தமது கலை
மரபைப் போற்றினர். எனவே
பல்லவர்களே
தமிழகக் கலை வரலாற்றுக்கு வித்திட்டவர்கள்
எனலாம்.
பல்லவர் காலத்தில் ஓவியக் கலையும் சிறப்புற்று இருந்தது
என்பதற்கான
சான்றுகள் கிடைத்துள்ளன.
எனினும் காலத்தின்
கோலத்தால் பெரும்பான்மையான ஓவியங்கள் அழிந்துவிட்டன.
பல்லவர் கால ஓவியக் கலை பாண்டியர், சோழர் ஓவியக் கலை
வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.