Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
காஞ்சி கைலாச நாதர் கோயி்லில் சோமாஸ்கந்தர்
ஓவியம் இடம் பெற்றுள்ளது. சிவபெருமானுக்கும்
உமைக்கும் இடையே குழந்தை வடிவில் முருகப்
பெருமான் அமர்ந்திருக்கும் அமைப்பே சோமாஸ்கந்தர்
ஆகும். இந்த ஓவியத்தில் சிவபெருமான் உருவம்
பெரிதும் அழிந்துவிட்டது. உமையின் உருவம் வண்ணக்
கோடுகளால் வரையப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுக்
காட்சியளிக்கிறது. சிவபெருமான் காலுக்கடியில் பூதமும்,
உமையின் அருகே அழகான பணிப்பெண்ணின்
உருவமும் அமைந்துள்ளன. சிவபெருமானின் இரு
கரங்களில் ஆபரணங்கள், மற்றும் கேயூரம் ஆகியன
காணப்படுகின்றன. இடையில் உதர பந்தம், மார்பில்
முப்புரி நூல் ஆகியன இடம் பெற்றுள்ளன. முருகப்
பெருமானது தலையில் கிரீடமும் ஒருபக்கக் கண்ணும்
தெளிவுறத் தெரிகின்றன. உமையின் ஒரு கரம்
முருகனைத் தட்டிக் கொடுப்பது போல அமைந்துள்ளது.